அண்ணன்னு சொல்லுடா.. டேனியல் பாலாஜிக்கு ஒரே சிரிப்பு.. முரளி பற்றி கேட்கும்போதே பூரிப்பு.. ரியல் ஹீரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் "ஆர்பிஎம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால், அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டேனியல் பாலாஜியின் நினைவுகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Tamilnadu Now என்ற யூடியூப் சேனலுக்கு, மறைந்த டேனியல் பாலாஜி ஒரு பேட்டியை தந்திருந்தார்.. அந்த பேட்டியை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.. குறிப்பாக அவரது அண்ணன் (பெரியப்பா மகன்) முரளி பற்றி டேனியல் பாலாஜி பேசியிருந்ததை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த பேட்டியில் டேனியல் பாலாஜி சொன்னதாவது:

Television daniel balaji Actor Murali

"எனக்கும், முரளி அண்ணனுக்கும் பெரிய அளவிலான வயது வித்தியாசம்.. நான் ஸ்கூல் போகுமபோது, அவர் நடிகராகிவிட்டார்.. நான் பிலிம் இன்ஸ்டிடியூடில் சேர்ந்தபோது, அவர் புகழின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்..

முடிந்தவரை அவரை நான் சந்திக்காமல் தவிர்த்தேன்.. காரணம், சிபாரிசு கேட்டு வந்துவிட்டேனோ என்று என்னை யாரும் நினைக்கக்கூடாது என்று நினைத்தேன். எங்கள் வீட்டிலும் அப்படித்தான் என்னை வளர்த்தார்கள்.

அதே அண்ணன் - மாறாத முரளி

பிலிம் இன்ஸ்டிடியூட் முடித்தபிறகுகூட, அவராகவே என்னை தேடியிருக்கிறார்.. "ஏன் சென்னையிலேயே இருந்துட்டு, என்னை வந்து பார்க்கவில்லை" என்று கேட்டுள்ளார்.. பிறகு, என்னை வீட்டுக்கும் வர சொல்லியிருந்தார்..

அதனால் அவரை போய் சந்தித்தேன்.. பெரிய அளவில் நடிகராக வளர்ந்துவிட்டதால், என்னை எப்படி ரிசீவ் செய்வாரோ என்று நினைத்து கொண்டே போனேன். ஆனால், சின்ன வயசில் எப்படி ஜாலியாக என்னிடம் விளையாடிட்டு பேசினாரோ, அதுபோலவே பேசினார்.. வாடா டேய் என்று சிரித்துக் கொண்டே கூப்பிட்டு உபசரித்தார்..

சின்ன வயசில் நான் அவரை "டேய் முரளி"ன்னு சிரித்து கொண்டே கூப்பிடுவேன்.. உடனே அவர் "அண்ணான்னு கூப்பிட மாட்டியா"ன்னு செல்லமாக கண்டிப்பார்.. அதுபோலவே இப்போதும் என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய ஆக்டிக் பற்றி, அவரிடமே நிறைய கமெண்ட் அடிப்பேன்..

புரொடியூசர் ஹீரோ

அவரை நான் புரொடியூசர் ஆக்டர் என்றுதான் சொல்வேன்.. "யாராவது ஒரு டைரக்டர், காதல் சீன் ஷூட் செய்யாமல் விடுபட்டிருந்தால், உங்களது எந்த படத்திலிருந்தும் ஏதாவது ஒரு காதல் சீனை உருவி வைத்துக் கொள்ளலாம்" என்பேன்.. இதை கேட்டதுமே முரளி அண்ணன் விழுந்து விழுந்து சிரித்தார்.

"நீ ஏன் ஏன் வில்லனாவே பண்றே?" என்று கேட்டார்.. "நீங்க இன்னமும் ஹீரோவாகவே பண்ணிட்டிருந்தால், நான் எப்படி நடிக்கிறது?" என்று திருப்பிக் கேட்டேன்.. அதற்கும் முரளி அண்ணன் சிரித்தார்..

கன்னட படங்கள்

என்னுடைய பெரியப்பாவும் (முரளி அப்பா) என் நடிப்பை பாராட்டினார்.. நான் டைரக்ட் செய்யும் போது, நீ நடிக்காம போயிட்டியே,
இந்த மாதிரி நடிகனை நான் மிஸ் பண்றேன்.. ஏன் தமிழிலேயே நடிக்கிறே? கன்னடத்தில் நடிக்கக்கூடாதா?ன்னு கேட்டார்.. உடனே அவருக்காக 4 கன்னட படங்களில் நடித்துவிட்டு வந்தேன் என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் டேனியல் பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+