48 வயதில் 42 படங்கள்.. நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. கண்ணீரில் ரசிகர்கள்
சென்னை: வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகினர், உறவினர்கள், ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவும் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இரவு 8.30 மணியளவில் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டேனியல் பாலாஜி, மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். அதாவது டேனியல் பாலாஜியின் அம்மாவும், முரளியின் அம்மாவும் சகோதரிகள் ஆவர். டேனியல் பாலாஜி சித்தி, அலைகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சித்தி சீரியலில் டேனியல் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதால் பாலாஜி, டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார்.
அவர் சீரியல்கள் மூலம் நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இதைத் தொடர்ந்து காக்க காக்க, பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது குரலுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு வில்லத்தனத்திற்கு பெயர் பெற்றவர். பாலாஜி, கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு யூனிட் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றினார். அங்கிருந்துதான் சித்தி தொடரில் நடித்தார்.
இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டிக்கும் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் அறிவழகன் ஆகும். 48 வயதில் 42 படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும் முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய கண்கள் இன்று தானமாக பெறப்பட்டது. அவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு திரையுலகினர், உறவினர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இரவு 8.30 மணியளவில் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. டேனியல் பாலாஜிக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications