கடும் எதிர்ப்பு! வழிக்கு வந்த மத்திய அரசு.. பொங்கல் நாளில் நடக்க இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளில் சிஏ தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, பொங்கல் நாளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வு வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே தேதிகளில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது . தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில்தான், பொங்கல் பண்டிகை நாளில் சிஏ தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சிபிஎம் கட்சியின் மூத்த நிர்வாகியும், மதுரை தொகுதி எம்பியுமான சு. வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். வெங்கடேசன் கூறுகையில், "பொங்கல் திருநாளன்று சிஏ தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. பொங்கல் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள். தேதிகளை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
பொங்கல் நாளன்று சிஏ தேர்வு நடத்துவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலும் கண்டனம் தெரிவித்திருந்தன பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் பாஜகவினர் இதற்கு பதில் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சிஏ தேர்வு தேதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. இது குறித்து சு வெங்கடேசன் எம்பி கூறியதாவது:-
"தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த #ICAI தேர்வுகளை மாற்ற வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன். தற்போது பொங்கல் திருநாள் அன்று இருந்த தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிபிட்டுள்ளார்.
பொங்கல் நாள் (ஜனவரி 14) அன்று நடைபெறும் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் சிஏ தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications