பார் டான்ஸ் ஆட வைத்து சம்பாதிக்கிறாங்க.. பயமா இருக்கு.. பெண் இன்ஸ்பெக்டரின் மகள் பரபரப்பு புகார்
பெண் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மீது பெற்ற மகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: என்னை பார்-ல டான்ஸ் ஆட வெச்சி எங்க அம்மா, அப்பா பணம் சம்பாதிச்சாங்க.. கொடுமைப்படுத்தறாங்க.. பயமா இருக்கு.. என் உயிரை காப்பாத்துங்க" என்று கோட்டூர்புரம் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகள் கதறுகிறார்!
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. சமீபத்தில் தேர்தல் நடந்ததால், இதற்காக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், விஜயலட்சுமி மீது ஒரு புகார் எழுந்துள்ளது. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது அந்த புகாரை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டு
தாய் தந்தையே தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மகள் கேண்டி குற்றஞ்சாட்டி உள்ளதுடன், உயிரை காப்பாற்றுமாறும் செய்தியாளர்களிடம் கதறியது மேலும் உறைய வைத்துள்ளது.

பெண் இன்ஸ்பெக்டர்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கேண்டி சொன்னதாவது: "என்னுடைய அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்-ல் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.

அடியாட்கள்
ஆனால் எனக்கு அதில் சுத்தமா உடன்பாடு இல்லை. அதனால அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். போன 23.04.2019 தேதி அன்று என் அம்மாவும், அப்பாவும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள். இதை அப்பகுதி மக்கள் எல்லாருமே பார்த்தாங்க. அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, அதுக்கப்புறம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தாங்க.

கொலை மிரட்டல்
அது மட்டும் இல்லை.. என் அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். என் அண்ணிகிட்ட 10 லட்சம் ரூபாய் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர்.

பயமா இருக்கு
ஆனால், எங்க அம்மா இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை பற்றி எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாலும் பெரிசா எடுத்துக்கறது இல்லை. இதனால என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications