என்னா உதை.. உள்ளே நுழையும் போதே மணமகன் வீட்டாரை நடுங்க செய்த மணமகள்.. வைரல் வீடியோ
சென்னை: மணமகள் ஒருவர் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அவர் செய்த சம்பவம் அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சியடைய செய்துவிட்டது.
திருமணம் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் திருமணம் முடிந்தவுடன் புது வீட்டிற்குள் புகும் மருமகளை வரவேற்க பல்வேறு தரப்பினர் அவரவர் குடும்ப முறைகளை பயன்படுத்துவர்.
சிலர் கால் படியில் அரிசியை வைத்து அதை வலதுகாலால் மணப்பெண் லேசாக தள்ளிவிட வேண்டும் என்பது ஒரு நடைமுறை. வீட்டு வாசலில் மரப்பலகையில் மணமக்களை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து அப்படியே வீட்டிற்கு அழைத்து சென்று சாமி அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்ற வைப்பது... இப்படி நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன.

விளக்கேந்தி வரும் மணமகள்
அது போல் புகுந்த வீட்டிற்கு வரும் மணமகள் குடம் நிறைய நீர் எடுத்து வருவதும், கையில் விளக்கேந்தி வருவதும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் மணமகள் திருமணம் முடிந்தவுடன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். ஆனால் அண்மையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

மணமகளின் செயல்கள்
அதில் மணமகள் நடந்து கொண்ட விதம் பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி அளக்கும் படியில் அரிசியை கொட்டி வைத்துள்ளனர். அதை லேசாக வலது காலால் சாய்த்து விட்டு உள்ளே வர வேண்டும். ஆனால் இந்த வீடியோவிலோ அந்த பெண் அரிசி படியை ஏதோ புட்பால் போல் உதைத்துவிட்டு உள்ளே செல்கிறார்.

அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார்
இதை பார்த்த மணமகன் வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி ஏழுந்தது. மணமகள் லேசாக உதைக்கும் அரிசி ஒரே பகுதியில் குவிந்து கொட்டும். ஆனால் இந்த பெண் உதைத்த அரிசியோ வீடு முழுவதும் சிதறியது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் சிலர் அந்த மருமகளை விமர்சனமும் செய்து வருகிறார்கள்.

கணவர் வீட்டார்
இன்னும் சிலரோ அரிசி படியையே இத்தனை உதை உதைக்கிறாரே கணவர் வீட்டாரை என்ன பாடுபடுத்த போகிறாரோ என்கிறார்கள். வீட்டுக்கு வரும் மருமகள் அனைவரிடமும் அன்பும் பாசமும் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. மருமகள் வீட்டிற்கு வரும் நேரம் குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும் என்பார்கள். மேலும் லட்சுமி கடாட்சம் என்றும் சொல்வார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications