ஆரம்பிக்குது ஐபிஎல்.. குஜராத்துக்கு “ஷாக்” - சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் “மிஸ்ஸாகும் மில்லர்”
“பச்சை - தங்க நிற தென்னாப்பிரிக்க சீருடை அணிந்து விளையாடு மிகப்பெரிய மரியாதை. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எனது தேவை இருக்கிறது.”
சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் போட்டியில் குஜராத்தின் நட்சத்திர பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் பங்கேற்க மாட்டார் என்று வெளியாகி இருக்கும் தகவல் குஜராத் அணி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
2023 ஐபிஎல் தொடர் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் குஜராத் டைடன்ஸ் அணியை சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விளையாட மாட்டார் என்ற தகவல் அந்த அணிக்கு இழப்பாக அமைந்து இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎலில் அறிமுகமான நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் இருந்து வருகிறார்.

2023 ஐபிஎல்
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி குஜராத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி மகேந்திர சிங் தோனி தலைமையிலான முன்னாள் ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை எதிர்கொள்கிறது. இதிலும் வெற்றிபெற்று 2 வது முறையாக கோப்பையை வெல்ல குஜராத் அணி திட்டமிட்டுள்ளது.

டேவிட் மில்லர்
அதற்கு குஜராத் அணி மலைபோல் நம்பி இருந்த வீரர் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர்தான். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாம்பியனாக முக்கிய காரணமாக இருந்தவர் அவர்தான். தற்போது தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக இருந்து வருகிறார். தொடர்ந்து ஃபார்மில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்காக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

குஜராத்துக்கு அதிர்ச்சி
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் போட்டிகள் ஐபிஎல் நடைபெறும் சமயத்தில் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மில்லரிடம் பேசியபோது ஐபிஎலுக்காக ஒருநாள் தொடரை விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் மறுத்துவிட்டாராம்.

டேவிட் மில்லர் விளக்கம்
அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் விளையாடாதது குஜராத்துக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய டேவிட் மில்லர், "குஜராத் டைட்டன்ஸ் அதிருப்தியில் உள்ளனர். அஹமதாபாத்தில் விளையாடுவது என்பது பெரிய விசயம். அதுவும் சென்னைக்கு எதிரான போட்டியில். அதை தவற விடுவது எனக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு விளையாடுவது பெருமை
அதே நேரம் பச்சை - தங்க நிற தென்னாப்பிரிக்க சீருடை அணிந்து விளையாடு மிகப்பெரிய மரியாதை. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எனது தேவை இருக்கிறது. எங்களிடம் வலுவான அணி இருக்கிறது. சிறப்பாக வீரர்களை தேர்வு செய்து உள்ளோம். அந்த வழியில் முன்னேறி செல்ல உள்ளோம்.

வேறு வழி இல்லை
நான் ஒரு போட்டியை தவறவிடுகிறேன். நான் இதனால் ஏமாற்றம் அடைகிறேனா இல்லையா என்பதைவிட எங்களுக்கு வேறு வழி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் கேப்டன் இல்லை. அதே நேரம் யார் மீது கசப்புணர்வுடன் நான் நடந்துகொள்ள மாட்டேன். நான் எனது அணிக்காக சிறப்பாக விளையாடி கேப்டன் எய்டன் மார்கிரமுக்கு துணையாக நிற்பேன்.

தென்னாப்பிரிக்க கேப்டன்
மார்கிரம் ஒரு சிறந்த தலைவர். அவருக்கு நிறைய முதிர்ச்சியும், நிதானமும் இருக்கிறது. எனது அணிக்கு என்ன தேவையோ அதை நான் கொடுப்பேன்." என்றார். தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த டெம்பா பவுமாவின் விலகலை தொடர்ந்து டேவிட் மில்லர் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்கிரமை தென்னாப்பிரிக்க நிர்வாகம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications