"வணக்கம் டா மாப்ள.. ஆஸ்திரேலியாவிலிருந்து.." பட்டையும், தாயத்துமா.. யாருன்னு பாருங்க.. செம, செம!
சென்னை: லாரா, கில்கிரிஸ்ட், டி வில்லியர்ஸ்.. இப்படி இந்தியர்களுக்கு பிடித்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் எல்லா காலத்திலும் யாராவது இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போ உள்ள காலகட்டத்தில், எல்லா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடிச்ச ஒரு ஃபாரின் பிளேயர்னா, அது டேவிட் வார்னர்தான்.
கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடனுக்கு பிறகு ஆஸ்திரேலியா கண்ட சூப்பரான ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பது மட்டும் இதற்கு காரணம் இல்லை. மனுஷன் கலக்குற ஃபீல்டு கிரிக்கெட்டையும் தாண்டி வேற.. வேற.
இத்தனைக்கும் ஆரம்பத்தில் பெரிதாக அலப்பறை செய்யல. ஹைதராபாத் அணி கேப்டனான பிறகுதான், ஆளே மாறிப்போயிட்டாரு. இவரு கிரிக்கெட்ல ஆடுனதைவிட டிக்டாக்ல குடும்பத்தோடு போடுற ஆட்டம்தான் இத்தனை ரசிகர்களுக்கு காரணம். அதிலும், தெலுங்கின் அதிரி புதிரி ஹிட்டான, புட்டபொம்மா பாட்டுக்கு இவர், குடும்பத்தோட போட்ட குத்தாட்டம் உலக ஃபேமஸ் ஆனது.

விசிறிகள் அதிகம் பாஸ்
இதன்பிறகு நம்மூர் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கூட இல்லாத அளவுக்கு ஃபேன் பேஸ் கூடிப்போச்சி வார்னருக்கு. பிறகு அப்பப்போ ஏதாவது டிக்டாக் வீடியோ போட்டு ரசிகர்களை ஆட விட்டு வந்தார். இப்போ அடுத்த அவதாரம் எடுத்துள்ளார்.

வணக்கம் டா மாப்ளே
நீங்க டிக்டாக் பயனாளரா இருந்தால், "வணக்கம்டா மாப்ள.. தேனில இருந்து அருண்" இந்த வசனத்தை அடிக்கடி கேட்டுருப்பீங்க. நெற்றி நிறைய விபூதி பட்டை, கழுத்தில் தாயத்து என காட்சியளிப்பார். அதே மாதிரி கெட்அப்பில் வார்னர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

தேனிக்காரர்
பார்க்க அப்படியே நம்ம தேனிக்காரர் மாதிரி பொருந்திப்போகிறது இந்த ஆஸ்திரேலியக்காரரின் முகம்னா பாருங்க. அவ்வளவுதான்.. ஜிவ்விட்டுப் போச்சி ரசிகர்களுக்கு. "தலைவாஆஆஆஆ" என கமெண்ட்டில் வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். "வணக்கம்டா மாப்ள ஆஸ்திரேலியாவில் இருந்து வார்னர் பேசுறேன்" என்று கமெண்ட் பாக்சை நிரப்பித் தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள்.

காட் ஃபாதர்
கொசுறு தகவல்: ஹைதராபாத் அணிக்காக ஆடும்போது நம்ம நட்டுவை.. அதாங்க நடராஜனை மெருகேற்றியதில் பெரும் பங்கு வார்னருக்கு உண்டு. ஆஸ்திரேலிய டி20 தொடரில் நடராஜன் பந்துகளை சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதனால் வார்னரை தனியாக வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்களாம் ஆஸி. பாய்ஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications