டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட.. ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு லஞ்ச ஒழிப்புதுறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் களம் ஒருபுறம் சூடாகி இருக்கிறது. அதே சமயத்தில் அரசு அதிகாரிகளும் நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆயுதப்படை டிஜிபியாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு லஞ்ச ஒழிப்புதுறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு எஸ்பியாக அய்மன் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை எஸ்பியாக சிபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரி நியமனம்
* ஊர்க்காவல் பட கூடுதல் கமாண்டண்ட் ஜெனரலாக ஏடிஜிபி ஜெயராம் நியமனம்
* காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக ஏஜி பாபு நியமனம்
* தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி, தொழில் நுட்ப சேவை பிரிவு டிஐஜியாக ஜெயலட்சுமி நியமனம்
* ராமநாதபுரம் சரக டிஐஜியாக மணிவன்னன்
* திண்டுக்கல் சரக டிஐஜியாக சசி மோகன் நியமனம்
* கோவை சரக டிஐஜியாக சாமிநாதன் நியமனம்
* திருச்சி சரக டிஐஜியாக சக்கரவர்த்தி நியமனம்
* திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக விஜயலட்சுமி நியமனம்
* நெல்லை சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் நியமனம்
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications