வைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி போட்டுள்ள டிவீட்டால் மதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆமை என்று அவர் வர்ணித்துள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது. இப்படித்தான் முன்பு திக தலைவர் கி. வீரமணியை ஓசி சோறு திங்க வந்தவர் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார் தயாநிதி அழகிரி. இப்போது வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

daya azhagiri teases vaiko in twitter

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், தமிழகத்தின் மிகவும் நம்பகம் வாய்ந்த அரசியல்வாதியான வைகோ தனது மதிமுகவை தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தயாநிதி அழகிரி கூறியுள்ளார். அத்தோடு விட்டால் பரவாயில்லை, கூடவே வைகோ பெயரைப் போட்டு ஆமை படத்தையும் போட்டுள்ளார்.

[உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்]

தயாநிதி அழகிரியின் இந்த டிவீட் மதிமுகவினரை கடுமையாக கொந்தளிக்க வைததுள்ளது. பலரும் தயாநிதியின் டிவீட்டில் வந்து கண்டனத்தைக் கொட்டி வருகின்றனர்.

நீங்களே ஆமையாக இருக்கலாமே!

தமிழன் சுந்தரா என்பவர் போட்டுள்ள ட்வீட்டில், உங்களையும் உங்களது குடும்பத்தையும் கட்சியை வீட்டு நீக்கியதற்கு என்ன காரணம் என்று முதலில் யோசியுங்கள், அதுகுறித்து ஆராயுங்கள். ஒரு வேளை உங்களையே ஆமையாக அவர்கள் கருதியிருக்கலாம், வெளியேற்றியிருக்கலாம். கருணாநிதி குடும்பம் என்பது மட்டுமே உங்களது ஒரே தகுதி. கலைஞர் இல்லாவிட்டால் நீங்கள் வெறும் குப்பை. முதல்ல உங்களை சரி பண்ணிக்கங்க, வளரப் பாருங்க என்று கடுமையாக சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+