Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயாநிதி மாறன் மைக்கில் "அதை" சொன்னதுமே.. அதிர்ந்த அரங்கம்.. திடீர் எமோஷனல்.. கவனித்த உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற திமுகவின் கையெழுத்து இயக்க துவக்க விழாவில், எம்பி தயாநிதி மாறன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அழுத்தம் தந்து வருகிறது.

Dayanidhi Maran DMK MP said that his Daughter did not get medical card due to NEET exam

இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. 2 நாளைக்கு முன்பு, இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.

கலைஞர் கருணாநிதி: "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசினார். அதன் சுருக்கம்தான் இது: "அனிதா இறந்தபோது ஒவ்வொரு பெற்றோரும் கதிகலங்கி, கண்கலங்கி நின்றார்கள்.. அந்த பெற்றோர்களில் நானும் ஒருவன்.. ஏனெனில் இந்த உண்மை எனக்கும் நடந்தது. எனக்கு நடந்த கதையை சொல்வதற்கு சரியான மேடை இதுதான்.
என் தாத்தா திமுக.. என் அப்பா திமுக.. என் தம்பி திமுக.. எங்கள் குடும்பமே திமுக குடும்பம். இந்தி எதிர்ப்பு வேற.. நாங்கள் படித்தது எல்லாமே ஸ்டேட் போர்டு (மாநில பாடத்திட்டம்) சிபிஎஸ்இ பள்ளியில் நாங்கள் படிக்கமாட்டோம். ஏனெனில் இந்தியை படித்துவிட்டு, என்னத்த புடுங்க போகிறோம் என்று சொல்லி நாங்கள் இந்தியே படிக்கவில்லை.

ஸ்டேட் போர்ட்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்தான் மகளை சேர்க்க வேண்டும் என்று மனைவி சொன்னார்.. நான் முடியவே முடியாது, ஸ்டேட் போர்டு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சொல்லி சண்டை போட்டேன். ஸ்டேட் போர்டா? சிபிஎஸ்இ-யா என்று எங்க குடும்பத்துக்குள்ளேயே சண்டை.. அவள் டாக்டருக்கு படிக்க வேண்டும் இல்லையா? என்று மனைவி கேட்டார்.

அதற்கு நான், "நீ ஏன்..ம்மா கவலைப்படறே? என் தாத்தா கலைஞர், எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார். என் அப்பா எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார்.. என் மாமா ஸ்டாலின், எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார்.. அவ்வளவு ஏன்? நானே மந்திரியாக இருக்கும்போது, எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கேன்.. அப்படியிருக்கும்போது, என் பொண்ணுக்கு நான் வாங்கித்தர மாட்டேனா? என்று மார்தட்டினேன்..

டாக்டர் சீட்: 2017ம் ஆண்டு என் மகள் பிளஸ் டூ முடித்தார். அப்போதுதான் நீட் தேர்வு வந்தது. ஆனால் என் மகளுக்கு என்னால் உதவி செய்ய முடியல.. என் மகள் என்னிடம் வந்து கேட்டார். "டாக்டர் சீட் வாங்கி தரேன்னு சொன்னியே அப்பா.. உன்னால்தானே நான் ஸ்டேட் போர்டில் படிச்சு நல்ல மார்க் வாங்கிருக்கேன். இப்போ எனக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தா" என்றார்.

அந்த நிமிடம் என் இயலாமையை பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.. என்னுடைய சொந்த மகளுக்கே, மருத்துவ படிப்புக்கு என்னால சீட் வாங்கித் தர முடியலை. நீட் தேர்வு எழுதினார்.. ஆனாலும், அவரால் தேர்வு பெற முடியவில்லை. ஏனெனில் ஸ்டேட் போர்டில் படித்துவிட்டு சிபிஎஸ்இ போர்டில், தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்?

அப்பதான், சகோதரி மருத்துவர் கனிமொழி என்னிடம், "அண்ணே, நீங்கள் ஏன் கவலைப்படறீங்க.. இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வுக்கு வெளிநாடு சென்று படிக்கலாம் என்று ஒரு விலக்கு உள்ளதே" என்றார்.

தொடர் போராட்டம்: அதனால், 2017ம் ஆண்டு அனைத்து பெற்றோர்களும் சேர்ந்து வழக்கு போட்டோம்.. அதற்கு பிறகு, என்னுடைய மகளை மலேசியா சென்று மருத்துவ படிப்பு படித்தார்.. நேற்றுதான், அவர் வெற்றி பெற்றாள் என்ற தகவல் வந்தது. இந்த 5 ஆண்டுகளாக நான் கஷ்டப்பட்டேனே, இதுபோலத்தானே மற்ற பெற்றோர்களும்? ஆனால் இந்த நிலை மாற வேண்டும். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக இந்த போராட்டம் ஒரே நாளில் முடியாது. இது ஒரு தொடர் போராட்டம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+