பண்ண முடியாதுன்னு சொன்னாங்க.. தமிழில் உருகிய உத்தப்பா.. போட்டிக்கு முன் தோனி எடுத்த முடிவு- பின்னணி
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்ற பின் மூத்த வீரர் உத்தப்பா கொடுத்த பேட்டி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் வென்று 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பைனல் சென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது.
லீக் போட்டிகளில் சிஎஸ்கே தொடர்ந்து 4 முறை டெல்லியிடம் வீழ்ந்தது. ஆனால் நேற்று பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரெய்னா
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ரெய்னா ஆட கூடிய நிலையில்தான் இருந்தார். காயத்தில் இருந்து நேற்று காலைதான் அவர் முழுமையாக குணமடைந்தார். சிஎஸ்கே நினைத்திருந்தால் அவரை எடுத்து இருக்கலாம். ஆனால் கேப்டன் தோனி ரெய்னாவை வைத்து ரிஸ்க் எடுக்காமல் மேலும் ஒருமுறை உத்தப்பாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்.

உத்தப்பா
ரெய்னாவும் ஆடுவதற்கு தயாராக இருந்த நிலையில் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு தரும் முடிவையே எடுத்துள்ளனர். உத்தப்பா கடந்த 4 சீசனாகவே பெரிதாக ஆடவில்லை. சிஎஸ்கேவிற்காக ஆடிய முதல் இரண்டு போட்டியிலும் பெரிதாக நம்பிக்கை தரவில்லை. ஆனாலும் உத்தப்பாவை தூக்கி வீசாமல் மூன்றாவதாக அவருக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து களமிறக்கினார் தோனி.

சிஎஸ்கே அணி
தோனி வைத்த இந்த நம்பிக்கைதான் உத்தப்பா சிஎஸ்கே அணியில் நேற்று அதிரடியாக ஆடி உத்தப்பா 44 பந்தில் 63 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தது. இதில் இரண்டு சிக்ஸ் அடக்கம். உத்தப்பாவை பலரும் வேண்டும் என்று சொன்ன போது தோனி மட்டும் உத்தப்பாவை ப்ளே ஆப் நேரத்தில் முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுத்தார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் உத்தப்பா சிறப்பாக ஆடினார்.

சையது முஷ்டாக் தொடர்
சையது முஷ்டாக் தொடரில் சதம் உட்பட வரிசையாக ஒவ்வொரு போட்டியிலும் கேரளா அணிக்காக அதிரடியாக ஆடி முழு பார்மோடுதான் உத்தப்பா சிஎஸ்கேவிற்கு வந்தார். 1000 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் 1000 ரன்களுக்கு இணையான ஒரு அரை சதத்தை முக்கியமான கட்டத்தில் அடித்து நேற்று சிஎஸ்கே அணியை ப்ளே ஆப் கொண்டு செல்ல உதவினார்.

உத்தப்பா தமிழ்
நேற்று போட்டிக்கு பின் கூட தன்னை பற்றி பெரிதாக பேசாமல் தோனியை பற்றி அழகான தமிழில் பேசி உத்தப்பா தமிழ் மக்களை கவர்ந்தார். கர்நாடகாவில் பிறந்தவர் என்றாலும் கேரளா பார்டர் என்பதால் தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல திராவிட மொழிகள் இவருக்கு அத்துப்படி. நேற்று தமிழில் பேசிய உத்தப்பா, வெளியில் பார்க்கும் போது தோனியை பார்த்து பலரும் கஷ்டப்பட்டனர்.

பண்ண முடியாது
தோனியை எல்லோரும் குறைவாக மதிப்பிட்டனர். அவரால் ஆட முடியாது என்றனர். அவர் பீக்கில் இல்லை. அவரால் ஆட முடியாது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் தோனி சிஎஸ்கே அணிக்கு தேவைப்படும் போது வந்து சரியாக ஆடிக்கொடுத்து இருக்கிறார். பண்ண முடியாதுன்னு சொன்னாங்க. ஆனால் தோனி செய்து காட்டி இருக்கிறார். அவர் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து இருந்தோம். அதை தோனி நிரூபித்துள்ளார், என்று உத்தப்பா தமிழில் குறிப்பிட்டார்.
-
அகீல் ஹொசைன், ஓவர்டன், குர்ஜப்னீத் சிங்.. சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் கட்டாயம்.. செய்வாரா ருதுராஜ்? -
ஒரு காலத்துல சிஎஸ்கே எப்படி இருந்த டீம் தெரியுமா.. ரொம்ப வருத்தமா இருக்கு.. புலம்பி தள்ளிய அஸ்வின்! -
சிஎஸ்கே வெற்றிக்கு 4 வீரர்கள் முக்கியம்.. பஞ்சாப் அணியின் ஒரே பலவீனம்! செய்வாரா ருதுராஜ் கெய்க்வாட்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications