தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி.. ஆவடியில் பரபரப்பு.. 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆவடியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில், அந்த உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழக்கம்போல், பருத்திப்பட்டு பசுமை பூங்கா பகுதியில் இன்று காலை ஆவடி மாநகராட்சி சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி இருந்ததைப் பார்த்து தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Sanitary workers

அதற்குள் பலர் ஏற்கனவே அந்த உணவைச் சாப்பிட்டிருந்ததால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்டோர் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகளும், ஆவடி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதுதான் இதற்கு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்குத் தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி விழுந்த சாம்பார் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தன. இன்று சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது. எங்களுக்கு வழங்கப்படும் உணவில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது" என பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+