ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படி 60 % ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அமலில் இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியத்தை தமிழக அரசு சற்றே உயர்த்தி உள்ளது. அதாவது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தில் அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அரசு ஊழியர்கள் பலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும்போதோ அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாத ஊதியம் அல்லது குடும்பத்தினருக்கு இடைக்கால மாத குடும்ப ஊதியம் வழங்கப்படுகிறது.

government employees Dearness Allowance

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான இடைக்கால மாத ஊதியம், கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 6-வது ஊதியக்குழு ஊதிய விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இடைக்கால மாத ஊதியம் மற்றும் இடைக்கால மாத குடும்ப ஊதியத்துக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஒரே சீராக 60 சதவீதமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவினை அறிவித்துள்ளது.

எனினும் 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாமலும் இருந்தால், இடைக்கால அடிப்படையில் அவர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள. மேலும், 6-வது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், 7-வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படாத நிலையில், 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் அகவிலைப்படி 262 சதவீதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த அனைத்து ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிகள், கருவூலங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும்படி கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்து, 1.1.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஓய்வு பெற்ற, இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) அல்லது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)- ல் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யும் வாய்ப்பினை வாங்கி உள்ளது.

தமிழக அரசின் அரசாணையின் படி, 1.1.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் TAPS திட்டத்தின் கீழ் இடைக்கால மாதாந்திர தொகை (Interim pay out) பெற விரும்பினால் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்திருக்க வேண்டும்.

அதேபோல் உயிரிழந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுதாரர்கள் TAPS திட்டத்தின் கீழ் இடைக்கால மாதாந்திர தொகை (Interim pay out) பெற விரும்பினால், அரசாணையில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்திருக்க வேண்டும்.

1.1.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் CPS திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை பெற விரும்பினால் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுதாரர்கள் CPS திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை பெற விரும்பினால் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இடைக்கால நிவாரணம் (Interim pay out) IFHRMS வழியாக பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். CPS கணக்கில் உள்ள ழுழு தொகையையும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஓய்வூதியதாரர், வாரிசுதாரர்கள் Final Settlement பெற்றுக் கொள்ளலாம்" என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+