முருகன் மாநாடு:பாஜகவின் இந்து கட்சி முத்திரைக்கு ஆப்பு? திமுகவின் காங்கிரஸ் பாணி 'Soft' இந்துத்துவா?
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்கிற இந்துமதம் சார்ந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே அடையாளமான "இந்துக்கள் கட்சி" என்ற முத்திரையை பறித்து அதனையும் தன்வயப்படுத்துகிற திமுகவின் முயற்சியா? அல்லது காங்கிரஸ் கட்சி பாணியில் மென்மை இந்துத்துவா (Soft Hindutva) கோட்பாட்டை நோக்கிய பயணமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.
தமிழ்நாட்டில் 2021-ல் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதலே 'திராவிட மாடல்' அரசு என்கிற புதிய கோட்பாடு முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை, ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு "கூட்டாட்சி" தத்துவத்தை திமுக அரசுதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை இருந்தாலும் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல், தமிழில் அர்ச்சனை, பெண்களும் அர்ச்சகராதல் என்கிற 'பெரியாரிய' கண்ணோட்டத்தை அமல்படுத்தியதும் திமுக அரசுதான். இதன் உச்சமாக திமுகவின் 'எதிர்காலம்' என அழைக்கப்படுகிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் என அறைகூவல் விடுத்தார். அத்துடன் நிற்காமல் தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணியினருக்கு திராவிடர் இயக்க கொள்கை விளக்க பயிற்சி பாசறைக் கூட்டங்களை நடத்தியவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான்.

திமுக பாணியில் காங்கிரஸ்: தமிழ்நாடும் தற்போதைய திமுக அரசும் முன்வைக்கிற சமூக நீதி பார்வையையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் சரி.. இதர பிற வட இந்திய தலைவர்களும் முன்வைக்கின்றனர்.. பேசுகின்றனர்.. திமுகவின் இத்தகைய அழுத்தம் திருத்தமான 'திராவிடப் போக்கு' வாக்களித்த தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் அசைக்கவே முடியாத ஆதரவை வலுவாக்கியது என்பதற்கு உதாரணமே 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்!
திமுக மீதான விமர்சனங்கள்: ஆனால் திடீரென திமுகவின் இந்த திராவிடப் போக்கு பெரும் விமர்சனங்களை அடுத்தடுத்து எதிர்கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல். முருகன் அழைக்கப்பட்டது கூட 'அரசு சார்ந்த' நிகழ்வு என புரிந்து கொள்ள முடியும். ஆனால் திராவிடத்தால் - தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதாக வாதிடப்படுகிற தமிழக பாஜக தலைவர்களுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் தரவேண்டிய தேவை இருக்கிறது என்கிற கேள்விக்கு விடை எதுவும் இல்லை.

கொள்கை முரண்: இதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு என 2 நாள் ஆன்மீக மாநாட்டை "திராவிட மாடல்" அரசுதான் நடத்தி இருக்கிறது. இதனை திமுகவில் உள்ள திராவிடர் இயக்க பற்றாளர்கள் கூட ரசிக்கவில்லை. "திராவிட சமத்துவ அரசு முருகன் மாநாடு நடத்துதல் கொள்கை முரண்!நாளை கிறித்துவ, இஸ்லாம் மாநாடு நடத்துமா?மதம் விலக்கி மனிதம் போற்றுவோம்" என்கிறார் திமுக சென்னை தெற்கு மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்டத் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தடா ஓ.சுந்தரம்.
பாஜகவின் ஆயுதம் பறிப்பு: நமது ஒன் இந்தியா தமிழுக்காக திமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் நாம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அந்த நிர்வாகிகள் சிலர், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருந்த ஒரே ஆயுதம் இந்துக்களுக்கான கட்சி என்பதுதான். அதனையும் தற்போது திமுக அரசு பறித்துக் கொண்டு விட்டது என்பதாகவே பார்க்கிறோம் என்கின்றனர். மேலும் சில திமுக ஆதரவாளர்கள், திராவிடர் இயக்க பயிற்சி பாசறையும் நடக்கிறது; ஆன்மீக மாநாடும் நடக்கிறது. இரண்டையும் சமமாக பார்க்கலாமே என்கின்றனர்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கருத்து: திமுகவின் தீவிர ஆதரவாளரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் நமது ஒன் இந்தியா தமிழுக்காக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பற்றி கேள்வி எழுப்பினோம். இது தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நம்மிடம் கூறியதாவது: முருகன் விழாவை திமுக நடத்துகிறதே என்று யார் கேட்கிறார்கள் தெரியுமா? நேற்று வரை திமுக, இந்து மதத்துக்கு எதிரான என பேசியவர்கள்தான். நேற்று வரை இந்து மத விழாக்களுக்கு திமுக தலைவர் ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என கேட்கிறவர்கள்தான். இப்போது திடீரென பெரியாருக்காக அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
திமுக அரசு செயல்பாடுகள்: அத்துடன் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது திமுக அல்ல. தமிழ்நாடு அரசு. ஒரு அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனால்தான் கலைஞர் ஆட்சியில் ஓடாது நின்ற திருவாரூர் தேர் ஓடியது. கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில்தான் ஏறத்தாழ 1,500 கோவில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த திமுக ஆட்சியில்தான் கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 6,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்பது தேர்தலை நோக்கியது அல்ல. அது ஓர் அரசின் இயல்பான நிகழ்வும் செயல்பாடும். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்தார்.
காங்கிரஸ் பாணி மென்மை இந்துத்துவா போக்கா?: அதே நேரத்தில் நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்களோ, வட இந்திய அரசியலில் பாஜகவை எதிர்கொள்ள மென்மை இந்துத்துவா Soft Hindutva என்கிற கோட்பாட்டை சில நேரங்களில் காங்கிரஸ் கையில் எடுப்பது வழக்கம். அதாவது பாஜகவுக்கு துளி வாய்ப்பையும் கொடுத்துவிடக் கூடாது என்பதால் காங்கிரஸ் அத்தகைய போக்கை பயன்படுத்தி இருக்கிறது. அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது; தோல்வியும் வந்து சேர்ந்திருக்கிறது. திமுகவும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கக் கூடாது என்கிற காங்கிரஸ் பாணி அணுகுமுறையாகவும் இருக்கலாம் என்கின்றனர். திமுக அல்லது திராவிட மாடல் அரசின் இந்த வியூகத்தின் எதிர்வினை என்னவோ மக்கள் கையில்தான் இருக்கிறது!
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications