ஒருவேளை தீபா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கிட்டாரா.. வைரலாகும் கலகல மீம்!
தீபா மாதவனின் போட்டோ ஒன்றினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சென்னை: இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா-மாதவனின் புகைப்படம்தான். இது மீம்தான்.. ஆனால் கலகலக்க வைத்துள்ளது.
தேர்தல் பரபரத்து வரும் வேளையில், ஒரு சத்தமும் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறார் தீபா. கூட்டணி எங்காவது வைக்க போகிறாரா? அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போகிறாரா? ஒருவேளை சத்தமே இல்லாமல் 5-வது அணி அமைக்கும் பணியில் இறங்கி உள்ளாரா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
ஆனால் கட்சி இருக்கோ இல்லையோ.. ஏதாவது செய்து லைம்லைட்டிலேயே இருப்பவர்தான் தீபா. இப்போது இவர் சும்மா இருந்தாலும் நெட்டிசன்கள் சும்மா விடுவதில்லை.

கணவர் மாதவன்
இந்த நிலையில், ஒரு போட்டோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக தனது கணவர் மாதவனை நியமித்த போது எடுக்கப்பட்ட போட்டோதான்.

பொதுச்செயலாளர்
அப்போது தீபா, "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கையினையும் வெளியிட்டிருந்தார்.

40 தொகுதிகள்
இப்போது இந்த போட்டோவை பதிவிட்டு, அதன் கீழே நெட்டிசன்களே வரும் தேர்தலில் 40 தொகுதியையும் பிரித்து இந்த பேரவைக்கே தந்துவிட்டார்கள். அதில், "தமிழகத்தில் இரண்டாவது கூட்டணி உறுதியானது... மாதவன் மற்றும் தீபா கூட்டணி கையெழுத்தானது..எனக்கு 20 உனக்கு 18 டிரைவர்க்கு 2" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.

கேள்விப்பட்டதே இல்லை
இருக்காதா பின்னே? கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமான பணிகள் என்ன என்று தெரியவில்லை. அதேபோல இக்கட்சியில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை நாம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தீபாவின் பெயரை நாம் உச்சரித்து கொண்டிருக்கிறோமே தவிர, வேறு ஒரு பிரயோஜனமும் இதுவரை காணோம்!
என்னவோ போங்க மாதவன்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications