தீபாவளி நெருங்கிய நேரம் பார்த்து.. ஆவின் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு.. அப்படி போடு.. இதுதான் தேவை
சென்னை: 2024 ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகளின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று ஆவின் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நிலவிய அதே விலைதான் இந்த வருடமும் நிலவும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், விலையை மலிவாக வைத்திருக்கவும், பண்டிகைக் காலங்களில் அதிக நுகர்வோரை ஈர்க்கவும் நோக்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ₹120 கோடி விற்பனையை ஆவின் இலக்காகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு குறைந்த விலையில் காஜு கட்லி, நெய் பாதுஷா மற்றும் நட்டி ஹல்வா போன்றவை அதிகம் விற்கப்பட்டது. அதேபோல் நெய், கோவா மற்றும் குலாப் ஜாமூன் ஆகியவற்றின் மிக்ஸ் விற்பனை செய்யப்பட்டது.
இது போக மிக்ஸர் மற்றும் முறுக்கு ஆகியவையும் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆவின் விற்பனை மொத்தம் ₹101 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ₹120 கோடி விற்பனையை ஆவின் இலக்காகக் கொண்டுள்ளது.
ஆவின் ரேஷன்: இது போக விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று பால் வளத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷனில் என்ன மாதிரியான ஆவின் பொருட்கள் கிடைக்கும் என்று விரைவில் லிஸ்ட் வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. 10 சதவிகித கடைகளில் மட்டுமே தற்போது தட்டுப்பாடு உள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications