தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு.. மிகப்பெரிய ஷாக்.. இப்படி பண்ணுனா.. எப்படி போறது?
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விமானங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு விமான கட்டண உயர்வால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தீபாவளிக்காக ஏராளமானோர் வெளியூர் செல்வதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் அவசரமாக சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு தீபாவளி தினத்திற்கு முன் விமானத்தில் செல்லும் பலர் உள்ளனர். சிலர் தீபாவளி அன்று அதிகாலை கூட செல்வார்கள். அவர்களுக்கான கட்டண வழிகாட்டிதான் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
கீழே இன்று முதல் வரை விமான கட்டணம் எவ்வளவு உள்ளது என்பது சராசரியாக கொடுக்கப்பட்டு உள்ளது. சராசரியாக குறைந்த பட்ச தொகை எவ்வளவு, அதிக பட்ச தொகை எவ்வளவு என்பதை கீழே பார்த்துக்கொள்ள முடியும். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் ரூட் ஆகும் இது.
சென்னை டூ திருச்சி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 5,804, அதிகபட்ச டிக்கெட் ரூ. 32111 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ மதுரை - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 12,804, அதிகபட்ச டிக்கெட் ரூ. 24161 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ பெங்களூர் - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 2,884, அதிகபட்ச டிக்கெட் ரூ. 14368 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ தூத்துக்குடி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 11,083, அதிகபட்ச டிக்கெட் ரூ. 26369 (எல்லாமே ஒன்வே)
பெங்களூர் டூ திருச்சி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 8,884, அதிகபட்ச டிக்கெட் ரூ. 18268 (எல்லாமே ஒன்வே )
பேருந்து பயணம்: 2024- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28/10/2024 திங்கட்கிழமை முதல் 30/10/2024 புதன்கிழமை வரை மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கம் போல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் R. மோகன் அவர்களின் தகவல் வெளியிட்டு உள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28/10/2024, 29/10/2024 மற்றும் 30/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகுளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விபரம்:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு முனையம்: திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் நிலையம் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
எனவே,பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 28/10/2024 முதல் 30/10/2024 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 30/10/2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27/10/2024 மற்றும் 28/10/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications