தி.நகரா இது? ஒரு காலத்தில் எப்படி இருந்த இடம்.. பொலிவிழந்த சாம்ராஜ்ஜியம்.. தீபாவளி வியாபாரம் மோசம்
சென்னை: சென்னையில் தீபாவளிக்கு இடையே தி நகரில் கடுமையான அளவு விற்பனை சரிந்து உள்ளது. முதன்முறையாக, தி நகரின் தீபாவளி விற்பனை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. தீபாவளியை நம்பி கூட்டம் வரும் என்று நினைத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.
நேரடி வருமானம் மற்றும் சில்லறை வருவாய் கிட்டத்தட்ட 30% குறைந்துள்ளது. பல வருடங்களாக தி.நகரின் பரபரப்பான பண்டிகைக் கூட்டத்தைப் தொழிலதிபர்கள்.. இந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளனர். ஆன்லைன் ஷாப்பிங்கின் வசதி மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டதால் தி நகரில் விற்பனை சரிந்து உள்ளது.

பாரம்பரியமாக உடைகள் வாங்குவதற்காக தி நகருக்கு குவியும் மக்கள் இந்த முறை மால்களுக்கு அதிகமாக சென்றுவிட்டனர். தீபாவளி என்றாலே சென்னையில் இருக்கும் தி.நகர் பகுதி திருவிழா போல மாறிவிடும், மூச்சு விட கூட முடியாத அளவிற்கு தி.நகரில் கூட்டம் அள்ளும். ஆனால் இந்த தீபாவளிக்கு தி.நகர் ஏரியாவை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
தீபாவளி நேரத்தில் சென்னையில் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் தி.நகர் பகுதியும் ஒன்று. புதிய உடைகள், நகைகள், வீட்டு சாமான்கள் என்று பலவிதமான பொருட்களை வாங்க இங்கு மக்கள் கூடுவார்கள். சென்னைவாசிகள் மட்டுமின்றி, சொந்த ஊருக்கு செல்லும் மக்களும் இங்கு வந்து உடைகள், பொருட்கள் வாங்கி செல்வார்கள். அண்டை மாவட்டங்களில் இருந்து கூட இங்கு உடைகள் எடுக்க கூட்டம் கூடும். தீபாவளிக்கு என்று சிறப்பு கடைகள் புற்றீசல் போல தோன்றுவது வழக்கம். பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் தி.நகர் பகுதியை நம்பித்தான் இருக்கிறது.
பலர் தி.நகரில் இந்த முறை துணி எடுக்கவில்லை.. மக்கள் கூட்டமே இல்லை, வருகிற கூட்டமும் எதுவும் வாங்குவது இல்லை என்று வியாபாரிகள் புலம்ப தொடங்கி உள்ளனர். பொருளாதார சரிவு காரணமாக வெடி விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது.ரோட்டோரமாக கடை வைத்திருக்கும் நபர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தீபாவளியை நம்பி கூட்டம் வரும் என்று நினைத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். விற்கும் பொருளையும் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வியாபாரிகள் புலம்புகிறார்கள். ஒரே நாளில் பல லட்சம் வருமானம் பார்க்கும் தி.நகர் மொத்தமாக முடங்கி உள்ளது. இங்கு நடக்கும் சாலை பணிகளால் கூட்டம் குறைந்துள்ளது, என்று அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வருந்தி உள்ளனர்.
இந்த முறை சென்னையில் தீபாவளிக்கு இடையே தி நகரில் கடுமையான அளவு விற்பனை சரிந்து உள்ளது. முதன்முறையாக, தி நகரின் தீபாவளி விற்பனை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. டிரெண்டிங் ஆடைகள் தி நகரில் கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங்கின் வசதி மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டதால் தி நகரில் விற்பனை சரிந்து உள்ளது. இப்படி பல்வேறு காரணங்கள் காரணமாகவே தி நகரில் நேரடி வருமானம் மற்றும் சில்லறை வருவாய் கிட்டத்தட்ட 30% குறைந்துள்ளது. வரும் வருடங்களில் இந்த வருவாய் மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications