சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளி ஷாப்பிங்.. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு போக போறீங்களா... உங்களுக்குத்தான் இது!

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் புது துணி எடுக்க சென்னை தியாகராய நகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனாவை ஒரு பொருட்டாகவே கருதாத மக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு வேண்டிய பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, தமிகத்தில் பலரும் புதிய ஆடைகள், நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம்.

சென்னையில் பிரதான வணிக நகரமான தியகராய நகர் பகுதியில் தினசரி தற்போது பல்லாயிரம் மக்கள் வந்து வேண்டிய பொருட்களை வாங்கி சென்று வருகிறார்கள்.

பிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும் தேதி.. அண்ணா பல்கலை அறிவிப்புபிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும் தேதி.. அண்ணா பல்கலை அறிவிப்பு

பலரும் போகிறார்கள்

பலரும் போகிறார்கள்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால் பலரும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்து விரும்பிய பொருட்களை வாங்குகிறார்கள். கொரோனா தொற்று குறித்த அச்சமோ, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமோ, முககவசம் அணிவது குறித்தோ அக்கறையோ பலருக்கும் இல்லை.

முககவசம் கட்டாயம்

முககவசம் கட்டாயம்

காற்று கூட போவதற்கு வழி இல்லாத அளவிற்கு மக்கள் தெருக்களில் நடந்து செல்கிறார்கள். எனினும் போலீசார் முககவசம் அணியாமல் வருவோரை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி

முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது. கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கடைகளுக்கு பொருட்களை வாங்கவிட்டு வரும் கூட்டத்தை பார்க்கும் போது, முககவசம் பலரும் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளிக்கு துளியும் வாய்ப்பில்லாத நிலையே இருக்கிறது.

போலீசார் தீவிரம்

தீபாவளி நெருங்கும் சமயத்தில் கூட்டம் இன்னும் பல மடங்கு அதிகரிக்குன் என்பதால் திருட்டு, வழிபறி நடக்காமல் இருக்கவும், அசம்பாவதிங்கள் நடக்காமல் இருக்கவும் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்வது மட்டுமே ஓரளவு பிரச்சனைகளை தடுக்க உதவும்.கொரோனா போய்விட்டதாக எண்ண வேண்டாம். பல நாடுகளில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அலட்சியங்கள் ஆபத்தில் முடியும்.

English summary
With just two weeks to go before the Deepavali festival, crowds are flocking to the Thiyagaraya Nagar area of Chennai to pick up new clothes. People who do not consider the corona as an end in itself are buying things and not follow social distance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X