எப்படி இது.. எங்கேயோ இடிக்குதே.. தீபிகா படுகோனே 19 வயசு போட்டோ பார்த்த ரசிகர்களுக்கு குபீர் டவுட்!
சென்னை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, மாடலிங் துறையில் அதாவது 19-வது வயதில் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைபார்த்த நெட்டிசன்கள் பலரும் தீபிகா படுகோனேவா இது என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா படுகோனே முதலில் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால் அதில் அந்த அளவுக்கு நாட்டம் இல்லாததால் மாடலிங் செய்தார். அப்போது கன்னட படத்தில் அவர் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார் தீபிகா படுகோனே. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான், பதான் ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்தன. ஜவான் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்த தீபிகாவுக்கு சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ஹீரோயின் நயன்தாராவுக்கு 11 கோடி ரூபாய் தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் தீபிகாவுக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த அளவுக்கு பாலிவுட் உலகில் கோலோச்சும் நடிகையாக தீபிகா படுகோனே உள்ளார். தீபிகா படுகோனே கடந்த 2007 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுகம் ஆனார். திரை உலகில் காலடி வைப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்தார்.
கல்லூரியில் படிக்கும் பொழுதே, தீபிகா படுகோனே விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் மாடலிங் துறையை தான் தேர்ந்தேடுத்தது எப்படி என்பது குறித்து தீபிகா படுகோன் பேசிய பழைய வீடியோ ஒன்று ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் டிசைனர்கள் பலரும் தீபிகா படுகோனின் அழகையும் அவரது அணுகுமுறையும் வெகுவாக பாராட்டும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் தீபிகா படுகோனின் அழகை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "தீபிகா படுகோன் எப்போதுமே பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று உச்ச நட்சத்திரமாக இருக்க வேண்டும் எனவும் நினைத்து இருக்கிறார்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசனுக்கு குபீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது பதிவில், "19 வயதில் 25 வயது போல எப்படி இவரால் இருக்க முடிகிறது.. ஆரம்பம் முதலே பக்குவப்பட்ட நபராக தீபிகா படுகோனே இருந்து இருக்கிறார்" என பதிவிட்டு இருக்கிறர்.
நீங்களும் சற்று உற்றுப் பார்த்தால் 19 வயது பெண்ணைப் போல தீபிகா இல்லை. டீனேஜ் வயசுக்கே உரித்தான பால் வடியும் முகம் அது அல்ல. 25 வயதாவது மதிக்கத்தக்க பெண்ணாக காட்சியளிக்கிறார். இது எப்படி, ஏன் என்று ரசிகர்கள் தங்கள் மூளையை கசக்கி யோசித்து வருகிறார்கள்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications