கரூர் சம்பவம் பற்றி சர்ச்சையாக பேசிய திமுக நிர்வாகி டீட்டா சரவணனுக்கு ஜாமீன்! முகாந்திரம் இல்லை என விடுவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புழல் சிறை வாசலில் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் டீட்டா சரவணன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. வழக்குப்பதிவில் முகாந்திரம் இல்லை என்று கூறி, டீட்டா சரவணனை கோர்ட் விடுதலை செய்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Deeta Saravanan DMK councillor Controversial remarks about CM vijay and Karur incident granted bail

இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்பில் மகேஷ் கைதாகி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட போது, வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

கரூரில் வைத்து விஜய்யை போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்), இந்த நிலை வந்திருக்குமா? என ஒருமையில் ஆவேசமாக பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வேலூர் மாவட்டம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை விழுப்புரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் டீட்டா சரவணன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. வழக்குப்பதிவில் முகாந்திரம் இல்லை என்று கூறி, டீட்டா சரவணனை கோர்ட் விடுதலை செய்துள்ளது.

முன்னதாக, டீட்டா சரவணன் மீது, அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த டீட்டா சரவணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

டீட்டா சரவணன் பெங்களூருக்கு சென்று இருக்கலாம் என்று அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரத்தில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கோர்ட், வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+