ஆர்.எஸ் பாரதி, திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதியப்பட்டது. அதேபோல, அரசு பணியாளர் தேர்வாணையம் முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ் பாரதி மற்றும் தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி நிர்மல் குமார் முன்பு நடைபெற்று வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரபட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கபட்டது.
இதையடுத்து, நீதிபதி நிர்மல் குமார் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது பதியபட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications