ஒரு ஓட்டில் வென்ற தவெக எம்எல்ஏ.. திமுக மாஜி அமைச்சர் பெரியகருப்பன் வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரிய கருப்பன் வழக்குக்கு எதிராக சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சீனிவாச சேதுபதி களமிறங்கினார். இதில், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்று வென்றார். அதாவது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றியை தட்டி சென்றார்.

High Court dismisss Petition Filed by Former DMK Minister Periya Karuppan

இது மிக குறைந்த வாக்கு வித்தியாசம் என்பதால், தேர்தல் முடிவு தொடர்பாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தனது தொகுதிக்கான ஒரு தபால் வாக்கு தவறுதலாக வேறு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த வாக்கு தனது தொகுதி கணக்கில் சேர்க்கப்படாததால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிராக சீனிவாச சேதுபதி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்று பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதி இளந்திரயன் முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்த தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாவது:- தொகுதிகள், எண் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்படுகிறதே தவிர பெயர் அடிப்படையில் அல்ல.

அதுமட்டுமின்றி தபால் வாக்குகளின் உறைகளில், தொகுதி எண், பெயர், மாவட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் வழக்கில் கூறியுள்ளதற்கு எந்த அடிப்படையும் இல்லை" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, பெரிய கருப்பன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+