ஜனநாயகன் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? சென்சார் சான்றிதழ் இன்னும் வரவில்லை.. நிர்மல் குமார் ஆதங்கம்
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு பல வாரங்களுக்கு முன்பே யு/ஏ சான்றிதழை சென்சார் உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர் என்றும் ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? என்று தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் 9 ஆம் தேதி திரைக்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த படம் திரைக்கு வருகிறது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சான்றிதழ் பரிந்துரைத்தும் தற்போது வரை தரப்படவில்லை என்று தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெற்றி வாகை சூடுவோம்
இது தொடர்பாக நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை.
தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். ஜனநாயகன் ரிலீஸ்க்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்
ஒரு பக்கம் சிவகாத்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாகுவதாலும் ஜனநாயகன் படத்திற்கு தியேட்டர்கள் பாதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. தனியாக ரிலீஸ் ஆனால் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ரூ.1,000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படமாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்த கனவு பலிப்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
தற்போது சென்சார் சர்டிபிகேட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும் இன்னும் 6 நாட்கள் இருப்பதனால் அதற்குள் சென்சார் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
ஜனநாயகன் டிரைலர் வெளியீடு
இன்று ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான 4 மணி நேரத்திற்கு 70 லட்சம் பார்வையாளர்களையும் 9 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று ட்விட்டர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. படத்தில் விஜய் பல அரசியல் வசனங்களை பேசியுள்ளார்.
இதேபோல் இந்த டிரைலரில் ஒரு காட்சியில் தவெக நிர்வாகி அருண்ராஜும் இடம்பெற்றுள்ளார். விஜய்யின் பெயர் டிவிகே (தளபதி வெற்றி கொண்டான்), டிவிகேவின் கொடியில் உள்ள இரட்டை யானைகள் வருவது போன்ற ஒரு காட்சியும் இடம்பெற்று இருந்தது. கடைசியில் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அரசியலுக்கு வாங்கடா என்று சொன்னால் கொலை செய்வதற்கும், கொள்ளையடிப்பதற்கு வந்து இருக்கீங்களடா என்று சாட்டையை சுழற்றுவது போன்ற காட்சிகளும் அடங்கி இருந்தது.
-
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
“விஜய் பாணியிலேயே சொல்லணும்னா.. தவெக வாக்குறுதிகள் வொர்த் இல்லை”.. தவாக வேல்முருகன் சுளீர்! -
விஜய்யின் தேர்தல் அறிக்கையிலும் ஓசியா? ஸ்டாலின் சார் எங்களை மன்னிச்சிடுங்க! தவெக பெண் வீடியோ -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம் -
“10 வருட உழைப்பிற்கு பலன் இல்லை.. பணம் வாங்கிக்கொண்டு பதவி”.. சென்னை தவெக மா.செ மீது குற்றச்சாட்டு! -
சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்! -
நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? விஜய் வாக்குறுதியை விளாசும் இடும்பாவனம் கார்த்திக் -
"உயிர் முக்கியம் பிகிலு”.. தவெக தலைவர் விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்! -
“திரிஷா வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது…” விஜய்க்கு குட்டு, ஓபனாக பேசிய பார்த்திபன் -
வீதிக்கு வந்த விஜய் குடும்ப பிரச்சனை.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே! -
திரிஷாவின் செல்ல நாய் ‘இஸ்ஸி’! எந்த வகை நாய் தெரியுமா? இத்தனை சிறப்புகளாம்! இதனால் தான் ஸ்பெஷல் போல!












Click it and Unblock the Notifications