தீபாவளிக்கு முன்.. நாள் குறித்த ஈடி.. திமுக முக்கிய "தலைமைக்கே" குறியாமே.. சீக்ரெட்டை உடைத்த புள்ளி
சென்னை: திமுகவின் முதல் குடும்பத்தை பாஜக அட்டாக் செய்யும். தீபாவளிக்கு முன் முதல் குடும்பத்தை கண்டிப்பாக டெல்லி மேலிடம் குறி வைக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7 தேதி இரவு முதல் அமலாக்க துறை தன்னுடைய காவலில் எடுத்து விசாரித்தது. 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

பேட்டி: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜிக்கு தனக்கு எதிரான ஆவணங்களுக்கு பதில் சொல்லவே பல காலம் ஆகும். இதில் பதில் சொல்லி அவர் வெளியே வர மிக நீண்ட காலம் ஆகும். அமலாக்கத்துறை இந்த வழக்கில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறது. இதனால் செந்தில் பாலாஜி வெளியே வர முடியாது.
3000 பக்க ரிப்போர்ட் எல்லாம் இப்போது உருவாக்கப்பட்டது இல்லை. முன்பே உருவாக்கப்பட்டது. 5 நாட்களில் எல்லாம் அமலாக்கத்துறை ரிப்போர்ட் உருவாக்கி இருக்கவே முடியாது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையை அவமதித்தார். கோஷம் எழுப்பினார். அதிகாரிகளுக்கே பிரஷர் கொடுத்தார். அதனால்தான் அமலாக்கத்துறை இப்படி செய்கிறது.

இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் அவரை அப்படி அமலாக்கத்துறை நடத்தவில்லை. சம்மனுக்கு கூட செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. சமீபத்தில் ஐ பெரியசாமி கூட விசாரணைக்கு சென்று வந்தார். அவர் சீனியர். ஆனாலும் அமைதியாக விசாரணைக்கு சென்றுவிட்டு வந்துவிட்டார்.
செந்தில் பாலாஜி ஆணவமாக இருந்ததுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். செந்தில் பாலாஜியை மட்டுமின்றி திமுகவையும் பாஜக பழிவாங்குகிறது. செந்தில் பாலாஜி கொஞ்சம் கூடுதலாக சிக்கி உள்ளார். அதனால்தான் பொன்முடியிடம் காட்டப்படாத ஆர்வம் இங்கே காட்டப்படுகிறது. செந்தில் பாலாஜியின் ஆட்டம் அப்படி.

செந்தில் பாலாஜி பரிதாபத்துக்கு உரியவர். அண்ணாமலை பல அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுகிறார். அவர் சொல்வது எல்லாம் நடக்கத்தான் போகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடக்கவே போகிறது. அதை மறுக்க போவதே இல்லை.
ஆனால் அண்ணாமலை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கவில்லை., அவர் வாய்ப்பு வந்தது எல்லாத்தையும் உளறுகிறார். அவர் திமுக பைல்ஸ் 2.0 பற்றி பேசவே இல்லையே. பெரிய பெட்டியில் புகார் கொடுத்தார். ஆனால் நடைப்பயணத்தில் அண்ணாமலை அதை பற்றி எல்லாம் பேசவே இல்லையே?ஏனென்றால் திமுகவை வேரோடு சாய்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதெல்லாம் சாத்தியமா?

சொல்லுங்கள்? கண்டிப்பாக பாஜக திமுகவை விடாது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அடுத்து திமுகதான் பலமான கட்சி.இந்தியா கூட்டணியில் இருந்து எந்த கட்சி வெளியே போனாலும் திமுக போகாது. காங்கிரசை திமுக கண்டிப்பாக சுமக்கும்.
அதுவரை திமுகவை, திமுகவின் முதல் குடும்பத்தை பாஜக அட்டாக் செய்யும். யார் என்ன தடுத்தாலும் திமுகவின் முதல் குடும்பத்தை பாஜக அட்டாக் செய்யும். தீபாவளிக்கு முன் முதல் குடும்பத்தை கண்டிப்பாக பாஜக குறி வைக்கும், என்று குபேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications