டெல்லி போன அண்ணாமலை.. அப்செட் ஆன ஓபிஎஸ்.. "டயர்ட்" ஆன மேலிட பாஜக.. ஆஹா இவ்வளவு விஷயம் நடத்துருக்கா?
எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஆதரித்து டெல்லி பாஜக டயர்ட் ஆகிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வென்றுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கினர்.
அதில் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தை பாஜகவும் கைவிட தொடங்கி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்?
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் அரசியல் மொத்தமாக முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அவருக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி மிகப்பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிக்கொண்டு இருப்பார். பொதுச்செயலாளர் தேர்தலை உடனே அறிவிப்பார். அந்த தேர்தலில் வெற்றிபெறுவார். அதன்பின் பெரிய மாநாடு நடத்துவார். கொங்கு மண்டலத்தில் நடத்தாமல் தென் மண்டலத்தில் அல்லது மதுரையில் மாநாடு நடத்துவார். தன்னை பெரிய தலைவராக காட்டுவார். அதற்கான முன்னேற்பாடுதான் அவர் தீர்ப்பு வரும் நாளில் மதுரைக்கு சென்றார். முத்துராமலிங்க தேவர் பெயரை பயன்படுத்தினார். இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இரண்டு ஆப்ஷன்தான் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
ஒன்று எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் சமாதானம் பேசி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டிடிவி தினகரன் - சசிகலா - ஓபிஎஸ் இணைய வேண்டும். அதுவும் இல்லை என்றால் அமமுகவில் ஓ பன்னீர்செல்வம் இணைய வேண்டும். எடப்பாடி ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்லலாம். ஓபிஎஸ் ஒன்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆள் அல்ல. அவருக்கு நிர்வாகிகள் பலம் இல்லை. அதனால் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால் எடப்பாடி ஏற்கலாம். அவர் ஏற்காமல் போனால் வேண்டுமானால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

மெஜாரிட்டி முக்கியம்
மெஜாரிட்டிதான் எடப்பாடிக்கு ஆதரவாக முடிவு எடுத்து உள்ளது. அதனால் செயற்குழு, பொதுக்குழு எடுத்த முடிவு சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த முடிவை தமிழ்நாட்டில் தொண்டர்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதிமுக பிரச்சனை இப்போவதாவது முடிந்ததே என்று தொண்டர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இவ்வளவு நாள் சோர்வாக இருந்த தொண்டர்கள் இப்போதாவது நிம்மதியாக இருக்கிறார்கள். பிரச்சனை எப்படியோ முடிவிற்கு வந்துவிட்டது என்று நிம்மதியாக இருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை இப்போது டெல்லி போய் இருக்கிறார். இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் அணியில் சிலர் அண்ணாமலை மீது அப்செட்டில் இருக்கிறார்கள். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவே இல்லையே. தீர்ப்பில் பாஜக தகிடு தத்தம் செய்கிறதா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பாஜக உண்மையில் தீர்ப்பில் தலையிட்டு உள்ளது என்றே வைத்துக்கொள்வோம். அவர்களும் எவ்வளவு நாள் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முடியும். ஒன்றும் இல்லாத நபரை எத்தனை நாட்கள் ஆதரிக்க முடியும். அவர்கள் டயர்ட் ஆகிவிட்டனர்.

எத்தனை காலம்
இன்னும் எத்தனை காலத்திற்கு ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முடியும் என்று பாஜகவினர் டயர்ட் ஆகிவிட்டனர். ஓ பன்னீர்செல்வதிற்கு தொண்டர்கள் சப்போர்ட் இல்லை. அதை பாஜகவும் உணர்ந்து கொண்டது. அதனால்தான் பாஜக ஓ பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி இருக்கலாம். டெல்லி பாஜகவிற்கு இந்த விஷயம் எல்லாம் பெரிய கணக்கே இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரிய இடம் கிடைக்காது. அதனால் அவர்கள் ஓபிஎஸ் விவகாரம் பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படுவது இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications