நீங்க நேரில் வந்தா சரிவராது விஜய்.. பேக் அடித்த வைகோ.. டெல்லி நிகழ்ச்சியில் மாற்றம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. விஜய்யை வைத்து புத்தகம் வெளியிட திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் வைகோ மாற்றம் செய்துள்ளார். கூட்டம் அதிகமாக வரும் என்பதால் விஜய்க்கு அழைப்பு விடுத்த வைகோவே, அவரை வர வேண்டாம் என நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்றத்தில் என்னுடைய செயல்பாடு குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியுள்ளேன். பல நாட்களுக்கு முன்பே அந்த நூலின் முதல் பிரதியை டெல்லி வந்து நீங்கள் வந்து பெற்று கொள்ள வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கேட்டேன். ராகுல் காந்தி நூலை வெளியிட, முதலமைச்சர் பெற்று கொள்ள திட்டமிட்டேன். அதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்தார்.

மக்கள் வெள்ளமாக
ஆனால் இந்த செய்தி பரவியதற்கு பிறகு புது டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விழாவில் பங்கேற்கிறார் என தகவல் பரவியவுடன் கணக்கில் இல்லாதவர்கள் அலைபேசியிலும், நேரிலும், நண்பர்கள் மூலமாகவும் பேசுகிறார்கள். நாங்களும் அங்கு வரவேண்டும். எங்களுக்கு தனி அனுமதி சீட் தருவீர்களா என கேட்கிறார்கள். ஆயிரமாயிரம் பேர் வருவதற்கு அந்த மண்டபத்தில் இடமில்லை. அந்த மண்டபத்தில் 700 பேர் தான் உட்கார முடியும். அதிகபட்சம் வெளியில் 300 பேர் தான் ஸ்க்ரீன் வைத்து நிற்க முடியும்.
பல லட்சம் பேர் வருவார்களானால் கூட்ட நெரிசல் ஏற்பட கூடும். அது நிகழ்ச்சியை நடத்துவதில் ஒரு பக்கம் சங்கடத்தை ஏற்படுத்தும். நானே பலமுறை ஆழமாக யோசித்து நம்முடைய முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்துவிட கருதினேன். அதை அவரிடம் இந்த சிரமங்கள் இருக்கின்றன. எண்ணி பார்க்க முடியாதளவுக்கு மக்கள் வெள்ளமாக திரண்டு வந்துவிட்டால், அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது. நான் உத்தேசித்துள்ள நூல் வெளியீட்டு விழாவையும் நடத்த முடியாது.
திமுகவுக்கும் நன்றி
எனவே அதற்கு நீங்கள் வருவதை தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன் என கூறிவிட்டேன். அதற்கு பதிலாக இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மொழியாக்கம் முடிந்துவிடும். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்தில் வைகோ என்கிற அந்த நூலை ஆங்கிலை உரையை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டதை நீங்கள் சென்னையில் வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டேன். மகிழ்ச்சியோடு அவசியம் நான் வெளியிடுகிறேன் என்று முதலமைச்சர் கூறினார். என்னுடைய நூல் முன்னுரையில் திமுகவுக்கு நன்றி கூறியுள்ளேன். திமுகவின் இரண்டு தலைவர்களுக்கும் நன்றி கூறியுள்ளேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
