முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் கெஜ்ரிவால்.. அவசர அலோசனை.. இன்னொரு முக்கியமான மீட்டிங்கும் இருக்காம்!
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன் இந்தச் சந்திப்பு?
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆதரவு திரட்டி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கெஜ்ரிவால் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்ப வலியுறுத்தி வருகிறார்.
மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள மசோதாவை எதிர்க்கும்படி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும், பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறார்.
இந்நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். சென்னைக்கு வந்து முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மநீம தலைவர் கமல்ஹாசனையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications