3 மாசத்துக்கு முன்னாடிதான் பஞ்ச கச்சம் கட்டி மாலையும் கழுத்துமாக நின்ற டெல்லி கணேஷ்! மனைவி கண்ணீர்
சென்னை: நடிகர் டெல்லி கணேஷுக்கு 80 வயது தொடங்கியதை அடுத்து அண்மையில்தான் அவருக்கு சதாபிஷேகம் நடந்தது. இது தொடர்பாக மணக்கோலத்தில் அவருடைய புகைப்படங்கள் வைரலாகின.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் ஒரு கிராமத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 1944 ஆம் ஆண்டு பிறந்தார் கணேஷ். இவர் தட்சிண பாரத நாடக சபா என்கிற தில்லியை சேர்ந்த நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் இவர் தில்லி கணேஷ் என அழைக்கப்பட்டு வந்தார்.

விமான படையில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் இவருக்கு நடிப்பு மீதான ஆர்வம் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு இந்திய விமான படையில் இருந்து வெளியேறினார். பிறகு 1977ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ஒரு வீடு ஒரு உலகம், பசி, ஆடு பாம்பே, உறங்காத கண்கள், ராஜ பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். நாயகன், காமெடியன், வில்லன், குணச்சித்திரம் என அனைத்து அம்சங்களையும் தனது நடிப்பில் கொட்டினார். இவர் கமல்ஹாசனுக்கு நெருக்கமானவராக இருந்தார். 1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
கலைமாமணி விருதையும் இவர் பெற்றார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, வசந்தம், மனைவி, செல்லமே, வீட்டுக்கு வீடு லூட்டி, ஆஹா கல்யாணம் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இந்த நிலையில் டெல்லி கணேஷ் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 79 வயது முடிந்து 80 ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சதாபிஷேகத்தை பிரம்மாண்டமாக செய்தனர்.
சஷ்டியாப்தபூர்த்தி என்பது 60ஆவது வயதில் அடியெடுத்து வைப்போருக்கு நடைபெறும் திருமணம். சதாபிஷேகம் என்பது 80 ஆவது வயதில் அடியெடுத்து வைப்போருக்கானது. இரண்டுமே மிகவும் விசேஷமானது. கடவுள் கிருபை இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகும்.
பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு கழுத்தில் மாலை அணிந்து கொண்டு முகம் முழுக்க சிரிப்புடன் இருந்தார் டெல்லி கணேஷ். அவருடைய மனைவி அரக்கு, பச்சை நிறத்தில் மடிசார் கட்டிக் கொண்டு மாலையும் கழுத்துமாக அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்.
டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியதால் அவர் நடிப்பை விட்டுவிட்டு தனது பிசினஸ்ஸை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலை காலமானார். அவருடைய உடல் அவரது ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications