Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட நம்ம பக்கம் கோல் போடுறாரே.. விஜய் பேச்சை கேட்டு.. குஷியில் துள்ளிய டெல்லி.. ரசித்த பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்ட சில விஷயங்களை டெல்லி ரசித்து இருக்கிறதாம். அட இவர் நம்ம பக்கம் கோல் அடிக்கிறாரே என்று டெல்லி விஜய் பேச்சை மெச்சி இருக்கிறதாம்.. அப்படி என்ன நடந்தது?

தமிழக வெற்றிக்கழகம் சார்பாக புதுச்சேரியில் விஜய் பேசுகையில் பேச்சில், நெஞ்சில் குடியிருக்கும். தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், வில்லியனூர் மாதா.

மாகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் . புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். ஒன்றிய அரசுதான் தமிழகம் புதுச்சேரி என பிரித்து பார்க்கிறது. வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். உலகின் மூளையில் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான்.

Delhi is happy with the TVK Vijay speech at the Puducherry Stage

விஜய் சொன்னது என்ன?

தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக என்னை புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசு பாரபட்சம் பார்க்காமல் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். தமிழ்நாடு அப்படி இல்லை- இதை பார்த்தாவது திமுக அரசு கற்க வேண்டும்

தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை. புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? என்று விஜய் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

டெல்லி குஷி ஏன்?

விஜய் தனது பேச்சில் ஒன்றிய அரசு என்று கூறினாலும் பாஜகவை எங்கும் பெயர் சொல்லி விமர்சனம் செய்யவில்லை. ஒரு படி மேலே போய் பாஜக அமைச்சரை விஜய் மறைமுகமாக பாராட்டினார். அங்கே போலீசார் சிறப்பாக செயல்படுவதாகவும் கூட்டத்திற்கு சரியாக பாதுகாப்பு கொடுத்துள்ளதாகவும் விஜய் கூறினார்.

அங்கே போலீஸ் முதல்வர் ரங்கசாமி கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக அங்கே உள்துறை அமைச்சகம் ஆறுமுகம் நமச்சிவாயம் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் பாஜக அமைச்சர். அவர்தான் போலீசை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.

அப்படி இருக்கத்தான் அந்த சட்ட ஒழுங்கையும், போலீசார் செயலையும், அவர்கள் கொடுத்த பாதுகாப்பையும் விஜய் பாராட்டினார். கிட்டத்தட்ட பாஜக அமைச்சருக்கு விஜய் குட் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அதோடு பாஜக அங்கே செய்யும் கூட்டணி ஆட்சி நன்றாக உள்ளது. அங்கே ஆட்சியில் இல்லாத திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டாம், நம்ப வேண்டாம் என்றெல்லாம் பாஜக பக்கம் விஜய் கோல் அடித்தார்.

டெல்லி ஹாப்பி

டெல்லியில் பாஜக அரசியலை கவனிக்கும் சிலர் இதை புகழ்ந்து உள்ளார்களாம். அட விஜய் நமக்கு சாதகமாக மறைமுகமாக பேசுகிறாரே.. இது சரியாக இருக்கிறதே.. இதைதான் அவரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். இப்படியே போனால் புதுச்சேரியில் அவரை கூட்டணியில் சேர்க்கலாம். அதன் மூலம் தமிழ்நாட்டிலும் அவரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று டெல்லியில் பேச்சு எழுந்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+