முடியாது! கைவிரித்த மாவட்ட தலைகள்! சிக்கலில் மாணிக்கம் தாக்கூர்! சத்யமூர்த்தி பவனில் வெடித்த மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளுக்கு எதிராக மீண்டும் நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை துவக்குகிறது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டுள்ள னர். கூட்டத்தை அதிக அளவில் கூட்டி காட்டும் வகையில் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

அந்த வகையில், தமிழகத்திலிருந்து 2,000 பேர் வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் 50 பேரை அழைத்து வர ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

Manickam Tagore Congress

காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளது

இதனையடுத்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடத்தில், இதனை வலியுறுத்திப் பேசியிருக் கிறார் மானிக்கம் தாக்கூர்.

ஆனால், மாவட்ட தலைவர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, "மாவட்டத்திலிருந்து 50 பேரை டெல்லிக்கு அழைத்து வர வேண்டு மானால் எவ்வளவு செலவாகும் தெரியுமா? ரயிலில் டிக்கெட் கிடைக்காது. ப்ளைட்டில் தான் அழைத்து வர வேண்டும் ; ப்ளைட் சார்ஜ் ; டெல்லியில் தங்குவதற்கான ஹோட்டல் பில், மூன்று நாள் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அந்த 3 நாட்களுக்குமான சாப்பாட்டு செல்வு என கணக்கிட்டால், சில பல லட்சங்கள் தேவைப்படுகிறது.

பொருளாதார சூழல் எங்களிடத்தில் இல்லை

இத்தனை லட்சங்களை செலவு செய்யக்கூடிய அளவுக்கு பொருளாதார சூழல் எங்களிடத்தில் இல்லை. கட்சியிலிருந்து மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டால் ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு எங்களுடையது. அதனால் செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் "என்று மானிக்கம் தாக்கூரிடம் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்.

இதனைக்கேட்டு டென்சனான மாணிக்கம் தாக்கூர், "மாவட்ட தலைவர் பதவி வேணும்னு அடம் பிடித்து கேட்டு வாங்கிக்கிறீங்க. கட்சி தலைமை உத்தரவிட்டால் அந்த வேலையை செய்ய ஆயிரம் காரணங்களை சொல்றீங்க? உங்களால் முடியாதுன்னா, எதற்கு உங்களுக்கு பதவி? "என்று கடுப்படுத்தியிருக்கிறார்.

மாவட்டத்தில் என்ன செய்யனும்னு சொல்லுங்க செய்யுறோம்

இதனால் டென்சனான மாவட்ட தலைவர்கள் பலரும், "எங்க மாவட்டத்தில் கட்சி வேலைப் பார்க்கவும், கட்சியை வளர்க்கவும்தான் எங்களுக்கு பதவி கொடுக்கப்பட்டது. மாவட்டத்தில் என்ன செய்யனும்னு சொல்லுங்க செய்யுறோம். அதை விட்டுட்டு, டெல்லிக்கு செலவு பணம் ஆட்களை அழைச்சிட்டு வாங்கன்னா, எப்படி முடியும்? இதோ 75 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இரண்டு பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?

துண்டித்துக் கொண்டார் மானிக்கம் தாக்கூர்

எங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் என்ன திட்டமிட்டனர்? ஒன்னும் இல்லையே ! நாங்க நல்லாயில்லை ; ஆனா, யார் யார் நல்லாயிருக்காங்கங்கன்னு எங்களுக்கு தெரியாமல் இல்லை" என்று எகிறியிருக்கிறார்கள்.

இதனால், மாவட்ட தலைவர்களிடம் ஆர்கியூ பண்ணுவதை துண்டித்துக் கொண்டார் மானிக்கம் தாக்கூர். இந்த நிலையில், "கட்சி மேலிடம் உத்தர விட்டதை எப்படி நிறைவேற்றுவது என தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறார்" என்கிறார்கள் சத்தியமூர்த்திபவன் தரப்பினர்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+