SIR யூஸ் பண்ணி இருக்காங்க.. அதனால்தான் தவெக வென்றது.. சேம் சைடு கோல் போட்ட திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மும்முனைப் போட்டியாக மாற்ற SIR நடைமுறை திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது என்று விசிக திருமாவளவன் பேசியது கடும் விவாதத்தை எழுப்பி உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR செயல்பாடுகளுக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையான 'SIR' (Special Intensive Revision) விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் குரல் எழுப்பி வருகின்றன.

Delhi SIR Protest

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளியிட்ட கருத்துகள், தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் "சேம் சைடு கோல்" அடித்தது போல் பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் டெல்லியில் கூறியது என்ன?

போராட்டக் களத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மும்முனைப் போட்டியாக மாற்ற SIR நடைமுறை திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலை மாற்றி அமைத்ததாகவும், அதன் விளைவாகவே தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் களம் உருவாகி விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது போன்ற சூழல் உருவானது என்றும் அவர் சாடியுள்ளார். மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க இத்தகைய வேலைகளைச் செய்தன என்பது அவரது வாதத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

'சேம் சைடு கோல்'?

விசிக தற்போது தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும், அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் ஒரு முக்கிய காட்சியாகும். ஆளும் கூட்டணியின் முக்கியத் தலைவரே இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவின் வெற்றி ஜனநாயக முறைப்படியானதல்ல என்ற தொனி: மக்கள் ஆதரவாலும், தெளிவான களப்பணியாலும்தான் வெற்றி பெற்றது என்பது தவெகவின் நம்பிக்கை. ஆனால் திருமாவளவனின் இந்தப் பேச்சு, "தேர்தல் ஆணையம் செய்த SIR குழப்பத்தால்தான் தவெக வென்றது.. இல்லையென்றால் வென்றிருக்க முடியாது" என்று மறைமுகமாகக் கூறுவது போல் அமைந்துள்ளது.

கூட்டணி தர்மத்திற்கு எதிரான தாக்குதல்: ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, தன் சொந்த முதல்வரின் தேர்தல் வெற்றியை ஒரு "தொழில்நுட்ப சதி" அல்லது "தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கத்தால் கிடைத்தது" என்று பேசுவது கூட்டணிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது.

எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த ஆயுதம்: தவெகவின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு, ஆளும் கூட்டணிக் கட்சியின் தலைவரே தவெக வெற்றியைச் சந்தேகப்பட்டுப் பேசியிருப்பது மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. "தவெக முறைகேடாகத்தான் வென்றது என்பதை அவர்களின் கூட்டணிக் கட்சியே ஒப்புக் கொண்டுவிட்டது" என எதிர்க்கட்சிகள் உடனடியாகப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன.

விஜய் வெளியே பிரபலமாக இருப்பது போல காட்டிக்கொண்டார். ஆனால் இப்போது அந்த பிரபலம் எல்லாம் பொய்.. அவர் வென்றதே SIR வைத்துதான் என்ற வாதத்தை திருமாவின் பேச்சு உருவாக்கி உள்ளது.

கூட்டணியில் விரிசல் ஏற்படுமா?

தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், ஞானேஷ் குமார் மீதும் குற்றச்சாட்டு வைக்க முயன்ற திருமாவளவன், அளித்துள்ள பேட்டி இப்போது ஆளும் தவெக மற்றும் விசிக இடையேயான உறவிலேயே ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்தப் போய், சொந்த கூட்டணிக் கட்சியின் அரசாங்கத்தின் அடித்தளத்தையே உலுக்கும் வகையில் பேசிவிட்டாரா திருமாவளவன் என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் அடுத்த சில நாட்களுக்குத் தீவிரமாக எதிரொலிக்கும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+