Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'?
மத்திய அரசு கொண்டு வரவுள்ள அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (131-வது திருத்தம்) 2026 மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) திட்டம் நாடாளுமன்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் தென் இந்திய மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்திலும் சரி, பொருளாதாரம், நிதி ஆதாரம் என அனைத்திலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட உள்ளது.
இப்புதிய திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், தற்போது இருக்கும் மொத்த லோக்சாப இடங்கள் 550ல் இருந்து 850 ஆக உயரும். இதில் இந்தி பேசும் வட மாநிலங்களின் லோக்சபா இடங்கள் 38.1% இலிருந்து 43.1% ஆக உயரும் நிலையில் கொள்கை முடிவுகளில் பெரும் ஆதிக்கம் பெறும்.

இதேவேளையில் தென் மாநிலங்களின் லோக்சபா இடங்கள் பங்கு 24.3% இலிருந்து 20.7% ஆக குறையும். இந்த இடஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் செயல்படுத்துவதாக மத்திய அரசு கூறும் நிலையில், பல ஆண்டு முயற்சிக்கு பின்பு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இது பெரும் இழப்பாக மாறியுள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள வட மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, உத்தரப்பிரதேசம் 80 இடங்களில் இருந்து 138 இடங்களுக்கு அதிகரிக்கலாம். ஆனால் கேரளா வெறும் 3 இடங்கள் மட்டுமே கூடும். தமிழ்நாடு 39 இலிருந்து 50 இடங்களுக்கு உயர்ந்தாலும், நாடாளுமன்றத்தில் மொத்த பங்கு 7.18% இலிருந்து 5.88% ஆக குறையும். மொத்தத்தில், மக்கள் தொகை அடிப்படையில் இடவசதி மறுவிநியோகம் செய்யப்பட்டால், மொத்த 5 தென் இந்தியா மாநிலங்களின் ஆதிக்கம் லோக்சபாவில் தற்போது இருக்கும் 24.3 சதவீதத்தில் இருந்து 20.7 சதவீதமாக குறைய உள்ளது.
நாளை முக்கிய விவாதம்
நாடாளுமன்றத்தில் நாளை ஏப்ரல் 16ஆம் தேதி மீண்டும் தொடங்கும் பட்ஜெட் அமர்வில் அரசியல் சட்ட (131-வது) திருத்த மசோதா மற்றும் டெலிமிடேஷன் மசோதா விவாதிக்கப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நிறைவேறினால் லோக்சபா இடங்கள் விரிவடையும் போது, தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பு செய்தாலும், அரசியல் செல்வாக்கு குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் உருவாகும் பாதிப்பு என்ன?
அடிப்படை பிரச்சனை
தென் மாநிலங்கள் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா) நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக வரி வருமானம் அளித்தாலும், லோக்சபாவில் அவற்றின் குரல் குறையும் நிலை தான் தற்போது டெலிமிடேஷன் மசோதா உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்து முக்கிய கொள்கைகளிலும் தென் மாநிலங்களின் செல்வாக்கு குறையும் அபாயம் உள்ளது.
நிதி ஆணையத்தின்
இதில் முக்கியமாக மத்திய அரசின் வரி வசூலை பகிர்ந்தளிக்கும் நிதி ஆணையத்தின் பார்மூலாவும் (Finance Commission) மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் மாறும் வாய்ப்பு இருப்பதால், வட மாநிலங்களுக்கு அதிக நிதி செல்லும் நிலை உருவாகலாம்.
ஏற்கனவே மத்திய அரசு தனது வரி வசூலில் மாநில அரசுகளுக்கு குறைவான நிதி பங்கீட்டை அளிக்கும் நிலையில் புதிய மாற்றங்கள் மூலம் இந்த பங்கீடு மேலும் குறைய வாய்ப்புள்ளது. காரணம் மக்கள்தொகை. உதாரணமாக 15ஆம் நிதி கமிஷனில் பொருளாதாரத்தில் பன்தங்கிய மாநிலங்களுக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்ய 45 சதவீத பங்கீடு அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ள நிலையில், தமிழ்நாடு மத்திய அரசுக்கு அளிக்கும் 1 ரூபாய் வரி வருமானத்தில் வெறும் 27-29 பைசா மட்டுமே வரி பங்கீடாக அளிக்கிறது. இதுவே பொருளாதாரத்தில் பன்தங்கிய மாநிலங்களான உத்தர பிரதேசம் 2 ரூபாயும், பீகார் 7 ரூபாயும் பெறுகிறது.
தென் மாநிலங்களின் பங்கீடு நாடாளுமன்றத்தில் குறைந்தால் எதிர்காலத்தில் நிதி ஆணையம், ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் தங்களின் ஆதிக்கம் குறையும் என்ற அச்சம் உள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பின்பு இத்தகைய மாற்றம் பெரும் தாக்கத்தை உருவாக்கும்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி
தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு தண்டனையாக நிதி இழப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது இந்த 2 மசோதாவால் உருவாகிறது. நிதி ஆணையம் தற்போது 2011 மக்கள் கொகை அடிப்படையில் தான் நிதி ஒதுக்கீட்டை கணக்கிடுகிறது. இதை 2026 சென்செஸ் அடிப்படையில் மாற்றினால் மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலங்கள் அதிக வருமானத்தை பெறும்.
அதாவது தென்னிந்திய மாநிலங்கள் சம்பாதித்த பணத்தை, வட இந்திய மாநிலங்களில் பகிர்ந்துக்கொள்ளும், தென் மாநிலங்களுக்கான பங்கீடு குறையும்.
இரட்டை தண்டனை
மத்திய அரசுக்கு தென் மாநிலங்கள் அதிக வரி வருமானம் அளித்தாலும், அந்த வரிகள் எப்படி செலவிடப்படுகின்றன என்பதில் தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறும் நாடாளுமன்றத்தில் அவற்றின் குரல் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தென் மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக இந்த இரு மசோதாக்கள் உள்ளது.
இது தென்னிந்திய மாநிலங்களுக்கு இரட்டை தண்டனை ஆக விளங்குகிறது. இதனால் தென் மாநிலங்கள் பிராந்திய நிதி சுதந்திரத்தை வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
2026 மக்கள் தொகை கணக்கீடு
தற்போதைய அரசியல் சட்ட அமைப்பின்படி, லோக்சபா இடங்கள் மாநிலங்களுக்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பகிரப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்குள் உள்ள தொகுதிகள் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, 2026க்கு பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப் பின் முடிவுகள் வெளியிடப்படும் வரை தொடரும்.
கேள்விக்குறியான வளர்ச்சி மாடல்
இந்த 2 கொள்கை மூலம் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தென் மாநிலங்களின் வளர்ச்சி மாடல், வட இந்தியாவில் அதிகம் பின்பற்றப்படும் மக்கள் தொகை அடிப்படையிலான நலத்திட்டங்கள் அடிப்படையிலான மாடலுக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.
தீர்வுகள் என்ன?
இந்த நிலையை மாற்ற தற்போது நடைமுறையில் இருக்கும் மாநில அளவிலான லோக்சபா இடங்களின் எண்ணிக்கை நிலையாக வைத்து 50 சதவீதம் உயர்த்தலாம் அல்லது மக்கள் தொகை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார பங்கீடு இரண்டையும் கருத்தில் கொண்டு லோக்சபா இடங்களை ஒதுக்கலாம் என தெரிவித்துள்ளது. இல்லையெனில் அடுத்த 25 வருடம் இதே மாடலை தொடரலாம் என மாற்று யோசனைகளை தென்மாநில அரசுகள் முன்வைத்துள்ளது.
ஸ்டாலின் அவசர கூட்டம்
தொகுதி மறுவரையறை (Delimitation) திட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில், தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது! நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்துள்ளேன்.
தனிப்பட்ட மனிதர்கள் - அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் "மாபெரும் வரலாற்று அநீதி"! என டிவீட் செய்துள்ளார்.
-
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
இந்தியாவுக்கு வந்த கேட்ச்-22 சிக்கல்.. இனி அடுத்தடுத்து பிரச்சனை தான்? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா














Click it and Unblock the Notifications