தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை?
சென்னை: மத்திய அரசு, அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக திமுக சண்டை செய்ய, அதிமுகவோக அமோகமாக வரவேற்றிருக்கிறது. உண்மையில், என்னதான் பிரச்சனை என்பது இந்த செய்தி விவரிக்கிறது.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவரவதாகவும், அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

உண்மை என்ன?
பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீட்டை வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இதனை தற்போது அமல்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. என்னப்பா இது நல்ல விஷயம்தானே! என நமக்கு தோன்றலாம். ஆனால், இங்குதான் செக் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொகுதி மறுவரையறையை முடித்தால்தான் இதை அமல்படுத்த முடியும். எனவே தொகுதி மறுவரைக்கு ஆதரவு கொடுங்கள் என்று மத்திய அரசு கேட்கிறது.
தொகுதி மறுவரை என்றால் என்ன?
இந்திய நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகள் இருக்கின்றன. இதில் 543 இடங்கள் கொண்ட மக்களவைக்கு பொது தேர்தல் நடக்கும். ஆனால், மாநிலங்களவைக்கு இப்படி தேர்தல் நடக்காது. அப்படியெனில் மக்களவைதான் ரொம்ப முக்கியம். மொத்தமுள்ள 543 இடங்களில், தமிழ்நாட்டில் 49 இடங்கள் இருக்கின்றன.
மக்கள் தொகைக்கு ஏற்றார் போல இந்த இடங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 1971ல் மக்கள் தொகை சுமார் 50 கோடிதான். இப்போ 140 கோடி. சரி அப்படியெனில் இப்போ உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார் போல இடங்களை பிரிக்க வேண்டுமே! கரெக்ட், மத்திய அரசு அதைத்தான் செய்கிறது. ஆனால், இதில் சின்ன சட்ட சிக்கல் இருக்கிறது.
வட மாநிலங்களின் செயல்பாடு
ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டும் எனில், மக்கள் தொகை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்கள் இதில் சொதப்பியிருக்கின்றன.
ரெண்டு பேருக்கும் ஒரே மார்க் எப்படி போடுறது?
இப்படி இருக்கும்போது தொகுதி மறுவரையறையை அமல்படுத்தினால், தமிழ்நாட்டுக்கு குறைவான மக்களவை இடங்களும், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக இடங்களும் கிடைக்கும்.
அப்படின்னா.. படிச்ச பசங்களுக்கும் ஒரே மார்க்! கவனம் குறைவாக உள்ள பசங்களுக்கும் ஒரே மார்க் எப்படி கொடுக்க முடியும்? இந்த விஷயத்தில் மத்திய அரசு, படிக்காத கவனம் குறைவாக உள்ள மாணவர்களுக்கு நிறைய மார்க் போட முயற்சிக்கிறது.
சட்ட சீர்திருத்தம்
இதையெல்லாம் முன்கூட்டியே கணித்த அரசியல் தலைவர்கள், 1976ல் ஒரு சட்ட சீர்திருத்தத்தை கொண்டு வந்தார்கள். அதாவது குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில் வட மாநிலங்கள் கோட்டை விட்டுவிட்டன. எனவே அடுத்த 25 வருஷத்துக்கு தொகுதி மறுவரையறை செய்ய கூடாது என்று சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
திமுக சொல்வது என்ன?
இந்த 25 ஆண்டு காலக்கெடு, 2001ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. இத்தனை ஆண்டுகளில் வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதா? என்று கேட்டால் இல்லை. எனவே மற்றொரு 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்தி வைக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இப்படி இருக்கையில், இந்த 2026 ஆண்டிலும் வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை.
எனவே மேலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரை செய்யக்கூடாது, அதாவது வட மாநிலங்கள் எப்போது வழிக்கு வருகிறதோ, அதுவரை தொகுதி மறுவரையறை கூடாது என்று மத்திய அரசு சொல்ல வேண்டும்.
அதிமுகவின் நிலைப்பாடு
ஆனால், அப்படி சொல்லாமல் தொகுதி மறுவரையறைக்கு ரெடியாகி வருகிறது மத்திய அரசு. இதுதான் பிரச்சனைக்கு காரணம். இதைத்தான் திமுக எதிர்க்கிறது. அடுத்த் 25 ஆண்டுகளுக்கு மறுவரையை தள்ளி வைக்க வேண்டும், இதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் அதிமுக தொகுதிமறுவரையறைக்கு ஆதரவாக பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications