இன்று கே.என்.நேரு! நாளை அன்பில் மகேஷ்! சட்டசபை 'பாஸ்' ரெடி! சென்னையில் குவிந்த திருச்சி திமுகவினர்!
சென்னை: இன்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.
அதேபோல் நாளை பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் இன்றே சென்னையில் குவியத் தொடங்கிவிட்டனர்.
இதனிடையே திருச்சி மாவட்ட திமுகவினர் மொத்தமாக சென்னைக்கு ரயில் ஏறியதால் ராக்ஃபோர்ட், மங்களூரு, பல்லவன் உள்ளிட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

சட்டசபையில் மானியக் கோரிக்கை
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 8வது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம் அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை தனது துறை சார்ந்து வெளியிடவுள்ளதால் அவரது உரையை காணவும் வாழ்த்துச் சொல்லவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

நேரு ஆதரவாளர்கள்
அதேபோல் அமைச்சர் நேரு சேலம் மாவட்டத்துக்கும் தற்போது பொறுப்பு அமைச்சர் என்பதால் சேலத்திலிருந்தும் ஒரு பெரும் படை சென்னைக்கு வந்திருக்கிறது. இதனிடையே அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை இல்லத்தில் காலை, மதியம் என கட்சிக்காரர்களுக்கு தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மானியக் கோரிக்கையின் போது தன்னை சந்தித்து வாழ்த்துச் சொல்ல வருபவர்களுக்கு நேரு விருந்து வைப்பது வழக்கமான ஒன்று தான்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்திலிருந்து அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்ததை போல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர். காரணம் நாளை பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதே ஆகும். இந்தாண்டு ஏராளமான புதுமையான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தவிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

சட்டசபை பாஸ்கள்
முக்கியமான ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகளுக்கு மட்டும் சட்டசபை பாஸ்கள் அமைச்சர் நேரு தரப்பில் தரப்படவுள்ளன. மற்றபடி தொண்டர்களை வீட்டில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொள்கிறார் அமைச்சர் நேரு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications