Diwali: தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? கூடுதலாக ஒரு நாள் லீவ் கிடைக்குமா? பெரும் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரு நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் தீபாவளி என்பது இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடும் பண்டிகையான தீபாவளி வந்தால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கூடுதல் கொண்டாட்டம் தான்.

Demand Rises for Government to Declare Holiday After Diwali on October 21

அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக, தீபாவளி பண்டிகை சமயத்தில் ஒரு நாளைக்கு முன்போ, பின்போ தேவைக்கு ஏற்ப அரசு விடுமுறை அளித்து வருகிறது. அதற்கு பதிலாக அந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அது ஈடுசெய்யப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே அரசுக்கு கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே, தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.

வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும், பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்து, குடும்பத்தோடு கொண்டாடுவார்கள். தீபாவளி பண்டிக்கைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டால் பண்டிகையை சொந்த ஊருக்குச் சென்று சிறப்பாக கொண்டாடிவிட்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பொதுவாக, தீபாவளி நெருங்கும் சமயத்தில்தான் அரசு இதுபோன்ற விடுமுறையை அறிவிக்கும். கடந்த ஆண்டும் அதுபோலத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை முன்கூட்டியே அறிவித்தால், ரயில்கள், பேருந்துகளில் ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று அனைவரும் கருதுவதால், அரசு முன்கூட்டியே தீபாவளி விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் இதுவரை அக்டோபர் 21 ஆம் தேதி விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+