“டெங்கு காய்ச்சலால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு” - அமைச்சர் அருண்ராஜ் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 21,655 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், டெங்குவால் இந்த ஆண்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் படிப்படியாக டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் சென்னையில் இந்த மாதம் இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என்றும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Dengue Cases in Tamil Nadu Rise to 21 655 10 Deaths Reported Minister Arunraj

சென்னை, வடபழனியில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் அருண்ராஜ், வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, டெங்கு ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு முயற்சிகளை பார்வையிட்டேன். சென்னையில் 3.700 பேர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

மேலும் செவிலியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த ஆட்சியில் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படாமல் இருந்தார்கள். அப்போது பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். தற்போது பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்னர் உடனடியாக 4,724 செவிலியர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பணிபுரிவதற்காக எந்தவித பணமும் பெறாமல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் இடைத்தேர்தலுக்கு ஒருநாளுக்கு முன்னாள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஒருநாள் முன்னதாக எங்களிடம் கொடுத்தனர். அதற்கு ஒரு மாதம் ஆகியும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் போராட்டம் அறிவித்திருக்கலாம். ஆனால், போராட்டம்தான் அவர்களின் முதல் வடிவமாக இருந்தது.

செவிலியர்களின் போராட்டத்தின்போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அழைத்தபோது, செவிலியர்களுடன் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் உடன் இருப்பேன் என்று கூறியதால்தான் பேச்சுவார்த்தை காலதாமதமாக நடந்தது. பேச்சுவார்த்தையின்போது செயலாளர், நீங்கள் எங்களுக்கு கோரிக்கை அளித்திருக்கலாம்.

அதை நாங்கள் செய்யாவிட்டால், அதனைத் தொடர்ந்து நீங்கள் போராட்டம் நடத்தி இருக்கலாம் என்று கூறியதும், போராட்டக்காரர்களில் பத்தில் ஒன்பது பேர் அப்படியா இது எங்களுக்கு தெரியாது என்று வருத்தம் தெரிவித்தனர்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+