வேகமெடுக்கும் டெங்கு.. வீடுகளில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க சென்னைவாசிகளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டெங்கு ஜுரம் பீதியை கிளப்பி விட்டு வருகிறது.. பருவமழை தொடங்கும் முன்னாடியே, கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது... சென்னை மாநகராட்சியின் பல மண்டலங்களில் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்களிடையே பெரும் கவலையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 16500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிக பாதிப்புகள் கொண்ட மாவட்டமாக முதலிடத்தில் சென்னைதான் உள்ளது.

Dengue in Chennai Dengue Cases Major precautions

சென்னையில் டெங்கு

தினமும் காய்ச்சலால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பலருக்கும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் கொசுப்புழுக்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சலுடன் சேர்ந்து, கடுமையான மூட்டு வலியை உண்டாக்கும் சிக்கன்குனியா காய்ச்சலும் சென்னையில் வேகமெடுத்து வருகிறது. இந்த 2 நோய்களுமே பகல் நேரத்தில் கடிக்கும் "ஏடீஸ்" (Aedes) என்ற வகை கொசுக்களாலேயே பரவுகின்றன. இப்போது ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரும், திறந்தவெளி நீர்நிலைகளுமே இந்த கொசுக்கள் உற்பத்தி அடைவதற்கு முக்கிய காரணமாக மாறுகின்றன.

சென்னை மாநகராட்சி

நிலைமை சீரியஸாகியிருப்பதால், சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. கொசுப்புழுக்களை அழிக்க வீடு வீடாக சிறப்பு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்... தெருக்களில் புகையடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல இடங்களில் மெடிக்கல் கேம்ப்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வருகிறது தடுப்பூசி

இப்படிப்பட்ட சூழலில், டெங்கு நோயை மொத்தமாகவே கட்டுப்படுத்த கியூடெங்கா (QDENGA) என்ற இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி 2027- ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நற்செய்தி வெளியாகியிருக்கிறது..

ஜெர்மனியின் டகேடா நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்திருக்கிறது.. இந்தியாவில் விற்பனை செய்ய "டாக்டர் ரெட்டிஸ்" நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 4 முதல் 60 வயது வரை உள்ள அனைவருமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.. இதற்கு நம்முடைய மத்திய அரசும் ஏற்கனவே அனுமதி தந்து விட்டது.

கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம்

இருந்தாலும், தடுப்பூசி வரும் வரை கொசுக்களிடம் இருந்து தப்பித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதே அனைத்தையும் விட பெஸ்ட் வழியாகும். அந்தவகையில், பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

- வீட்டைச் சுற்றிலும், மொட்டை மாடியிலும் கிடக்கும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

- குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் சிமெண்ட் தொட்டிகளை மூடி வையுங்கள்.

- பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, உடல் முழுவதையும் மூடும் ஆடை அணிவது சிறந்தது.

- கொசுவலைகள் மற்றும் கொசு விரட்டி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

- திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்கள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி அல்லது உடலில் தடிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

- காய்ச்சல் நேரத்தில் கடைகளில் தானாக மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

டெங்கு தடுப்பில் அரசு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், நம்முடைய வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொண்டால், நம்மையும் குடும்பத்தையும் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+