Dengue: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பலி! தலைநகரில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பால் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா, ஜெயஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் இன்று ஹரிஷ்குமார் என்ற மாணவர் பலியானார்.

பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.

Dengue Fever

தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 156 பேர் காயச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்களில் 87 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 16,577 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை 9 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் டெங்கு பரவலில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பால் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா, ஜெயஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் 4ஆம் ஆண்டு படித்து வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் இன்று பலியானார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த 4 நாட்களாக மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த ஹரிஷ்குமார் இன்று உயிரிழந்துள்ளார். மாணவர்கள் தகவல் அளித்த நிலையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+