Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வேகமெடுக்கும் டெங்கு! பொதுமக்கள் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சென்னை, கோவை என 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக, துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது,

Dengue Tamil Nadu

"சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் சிவப்பு மண்டலத்தில் இருக்கின்றன. ஏடிஎஸ் வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15,796 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு. மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்ததால் பாதிப்பு அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு காணப்படுகிறது. தவிர திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது.

சென்னை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மறுபுறம் தமிழகத்தில் இந்த ஆண்டில் 22 பேர் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இந்த மரணங்கள் எல்லாம் நாய் கடிக்கு பின் முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தால் ஏற்பட்டதாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் துணை சுகாதார இயக்குனர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

டெங்கு காய்ச்சலும் சிகிச்சையும்

ஏடிஎஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றன. இந்த கொசு கடித்த 4 முதல் 10 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் ஏற்படும். அதாவது திடீரென 14 டிகிரி ஃபாரன் நீட் அளவுக்கு காய்ச்சல் ஏற்படும். அதே போல கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களுக்கு பின்னால் வலி இருக்கும். மேலும் மூட்டு மற்றும் தசை வலி இருக்கும். இத்துடன் குமட்டல் வாந்தி, உடலில் தடிப்புகள், சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை இருக்கும்.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு உடலில் ரத்த தட்டையணுக்கள் வேகமாக குறைய தொடங்கும். இதனால் ரத்த கசிவு ஏற்படும். கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக் கசிவு, வாந்தி வரும் போது அல்லது மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுதல், வேகமாக சுவாசித்தல் அமைதியின்மை, கை கால்கள் குளிர்ச்சியடைந்து ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்படும்.

டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில் இந்த வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக எந்த எதிர்ப்பு மருந்துகளும் கிடையாது. எனவே அறிகுறிகளை சரி செய்ய சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக உடலில் அதிக அளவுக்கு தண்ணீர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர். பழச்சாறு, இளநீர், கஞ்சி ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது. அதை எடுத்துக் கொள்ள முடியாத நேரங்களில், நரம்பு வழியாக திரவங்களை உடலுக்குள் அனுப்புவது, காய்ச்சலுக்கு சரியாக பாரசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவது இதுவே சிகிச்சை முறையாக இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+