சென்னையிலேயே டெங்குவை கட்டுப்படுத்த முடியல.. திணறும் தவெக அரசு! மக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் டெங்கு பரவி வருகிறது. தலைநகரிலேயே டெங்கு தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 244ஆக இருந்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 87 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Dengue spirals

சென்னையில் பாதிப்பு

சென்னையில் புறநகர் பகுதிகள் மற்றும் சில குறிப்பிட்ட மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக..

அடையாறு
அண்ணாநகர்
வளசரவாக்கம்
திரு.வி.க.நகர்

போன்ற பகுதிகளில் ஏடிஸ் கொசுப் புழுக்களின் உற்பத்தி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டிருக்கின்றன. பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுப் புழுக்கள் உள்ளதாக என ஆய்வு செய்து, கொசு ஒழிப்பு மருந்துகளை அடித்து வருகின்றனர். மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களும், அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்கான பிரத்யேக வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தொடர் காய்ச்சல், கடுமையான உடல்வலி அல்லது கண் பின்புறத்தில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால்.. சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தவெக அரசு செய்ய வேண்டியது

என்னதான் இப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் கூட.. சென்னையில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வழக்கமாக மழைக்காலம் வந்தவுடன் கொசு மருந்து அடிப்பது.. டெங்கு வார்டுகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும்.. சில விஷயங்களை சரியாக செய்தால் மட்டுமே தவெக அரசால் டெங்கு பாதிப்பை தடுக்க முடியும் என்று சுகாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

லார்வா மேப்பிங்

ஒவ்வொரு பகுதியிலும் கொசுப் புழுக்கள் எங்கு அதிகமாக உற்பத்தியாகின்றன என்பதை ஜிபிஎஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் லார்வா மேப்பிங் செய்ய வேண்டும். இதன் மூலம் எந்ததெந்த வார்டுகள் அதிக ஆபத்தில் உள்ளன என்பதை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

மனிதர்கள் செல்ல முடியாத பூட்டப்பட்ட வீடுகளின் மொட்டை மாடிகள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் பகுதிகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.

இது ரொம்பவும் முக்கியம்

சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதால் அவை கொசுக்கள் உற்பத்தியாகும் மையங்களாக மாறுகின்றன. இவற்றை முழுமையாக தடுத்து.. நீர் தேங்காமல் சீராக ஓடுவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்ய களப்பணியாளர்கள் முக்கியம். எனவே தற்காலிக ஊழியர்களை வைத்து பெயரளவில் வேலை செய்யாமல், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முறையான நவீன உபகரணங்களை வழங்கி.. அவர்களின் எண்ணிக்கையை வார்டுகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும்.

அதைவிட முக்கியம், பெரிய கட்டுமான நிறுவனங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தண்ணீர் தேங்கி கொசு புழுக்கள் உருவானால் வெறும் எச்சரிக்கையோடு நிறுத்தாமல் கடுமையான அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதையெல்லாம் தவெக அரசு செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+