அண்ணா பல்கலையில் டெங்கு பரிசோதனை.. 20+ மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு.. வீட்டுக்கு செல்ல அறிவுரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்த மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் வீடுதிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாத்துறை தெரிவித்தது.

Chennai Dengue Fever

டெங்கு பாதிப்பால் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் உயிரிழந்தது டெங்குவால் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. SCRUB TYPHUS என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றால் மாணவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சில மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகளில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்த மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பாத மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் உன்னி காய்ச்சலால் உயிரிழந்தது மாணவ மாணவிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+