இனி புத்தகங்கள் இல்லை; வீடியோவில் படிக்கலாம்! ’மணற்கேணி’ ஆப் பற்றி தெரியுமா மாணவர்களே?
சென்னை: இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் பல அதிரடியான மாற்றங்களைப் பெற்று வருகிறது பள்ளிக்கல்வித் துறை.
பாடப்புத்தகங்களைத் தாண்டி செயல்வழி கற்றல் என்பதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது என்றும் இதனை கொஞ்சம் விரிவாக சொல்லலாம்.
ஒவ்வொரு மேடையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி நமது உரிமை என்று விடாமல் சொல்லி வருகிறார். அதற்காகத்தான் காலை உணவுத்திட்டம் தொடங்கி 'புதுமைப் பெண்' திட்டம் வரை இந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கல்வித்துறையை மையப்படுத்தியே செயல்வடிவம் பெற்று வருகின்றது.

அதன் அடுத்தகட்டமாக பள்ளிப் பாடத்திட்டத்தை டிஜிட்டல் யுகம் நோக்கி கொண்டு சென்றுள்ளார் ஸ்டாலின். இதற்காக இப்போது 'மணற்கேணி' என்ற செயலியைப் புதியதாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்தச் செயலியை நேற்று மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், "கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவுடன் சிந்தக்கவும் கல்வி அறிவு ரொம்பவே முக்கியம். வாழ்க்கையில் ஒருவர் கற்றுக் கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது. ஆகவேதான் கல்வி யாராலும் திருட முடியாத சொத்து என்று சொல்றோம்" என அறிவுறுத்தி பேசியுள்ளார்.

இச்செயலி குறித்து கல்வியாளர் டாக்டர் வசந்தி தேவி, "கல்வி எல்லோருக்கும் பொதுவானது. அது எல்லோருக்கும் முறையாகக் கிடைக்கவேண்டும். அந்த வாய்ப்பை ஜனநாயகப்படுத்துவதுதான் இந்தச் செயலியின் நோக்கம்" எனச் சொல்கிறார்.
மாணவர்களுக்கு எளிதில் பாடங்களைப் புரியவைப்பதற்காக ஆசிரியர்கள் பல்வேறு துணைக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்றாக இந்த மணற்கேணி செயலியும் இருக்கப் போகிறது.
இந்தச் செயலியில் பாடங்களை விளக்கமாகப் புரிந்து கொள்ளலாம். அதற்காகக் காட்சி ரீதியிலான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவர் வாய்மொழியாக மட்டுமே அறிவியல், வேதியியல் போன்ற பாடங்களைச் செயல்முறை விளக்கத்துடன் கூடிய வீடியோக்களைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். இது ஒரு கூடுதல் சிறப்பு என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்தச் செயலியில் உள்ள வீடியோக்கள் 8 முதல் 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடியவை. மாணவர்களின் மூளைக்கு அதிகம் வேலை தரக்கூடியவை, கடினமான கேள்விகளைக் கொண்டவை என அனைத்தையும் மிக ஆர்வத்துடன் காணவைக்கும்படி இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேற்கொண்டு ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக ஒருவர் 12 ஆம் வகுப்பு செல்லப் போகின்றார் என வைத்துக்கொள்வோம். அவர் நேரடியாக 12 ஆம் வகுப்பில் உள்ள கடினமான பாடத்திட்டங்களைப் புரிந்துகொள்வது கடினம்.

ஆகவே அதற்கு முன்னதாகவே 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் படிக்கப்போகிற பாடங்களுக்கான அடிப்படை பாடங்களை 6 முதல் 11 வரையான மாணவர்களுக்கு முன்னதாகவே சொல்லிக் கொடுக்கும்படி இச்செயலியில் புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை மாணவர்கள் திரும்பத் திரும்பப் போய் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.
ஒருவர் 6 ஆம் வகுப்பில் உள்ள பாடப் புத்தகமானது 7 ஆம் வகுப்பு செல்லும் போது வைத்திருக்க மாட்டார். ஆனால், இச்செயலியில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் இருப்பதால், சந்தேகம் எழும்போது அப்புத்தகத்தை மீண்டும் வந்து பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்.
அதாவது, Related Basic Concepts உடன் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் கல்வியாளர் மாடசாமி.

இச்செயலியில் எல்லா பாடங்களும் வீடியோவாக இருக்காது. எந்தெந்த பாடங்களுக்கு வீடியோ விளக்கங்கள் தேவை என உணர்ந்து அதை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மாதம் மாதம் இச்செயலி அப்டேட் செய்யப்படும். ஓர் ஆண்டுக்குள் அனைத்தும் சரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
இதில் பாடத்திட்டம் சார்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குக் கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தரவிறக்கம் செய்து தங்களின் லேப்டாப் இல் கூட சேமித்து வைத்து தேவையான போது பார்த்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் மாணவர்கள் பார்க்கும் வீடியோவின் தரம், அதில் உள்ள கருப்பொருள் எல்லாம் எந்த அளவுக்குப் பயன் உள்ளதாக இருந்தது என்பதைக் கூறும் வகையில் அனைத்து வீடியோக்களுக்கும் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை மாணவர்கள் தங்களின் விருப்பப்படி மதிப்பெண் வழங்கலாம். அதைக் கொண்டு வல்லுநர் குழு மேலும் வீடியோவின் தரத்தை உயர்த்த வேண்டுமா? கருத்துகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டுமா? என்பதைக் குறித்து ஆராயும்.
இச்செயலி மாணவர்களுக்கு மட்டும் இல்லை. ஆசிரியர்களும் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி சேலையூர் தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெளியிடப்பட்டது. அது தொடர்பாகப் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில், "காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் அத்தொழில்நுட்பத்தைக் கல்வியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது" எனக் கூறியுள்ளார்.

இந்த 'மணற்கேணி' செயலியை The United Nations Convention to Combat Desertification இதன் நிர்வாக செயலர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் இப்ராஹி தியாவ்தான் வெளியிட்டுள்ளார்
அவர் "'முதன்முறையாக நான் தமிழ்நாட்டுக்கு வருகிறேன். முதன்முறையாகச் சென்னையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்கின்றேன். அது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்
மேலும் அவர், "இந்த மணற்கேணி' செயலியை உலகம் முழுவதும் இருந்து பயன்படுத்த முடியும். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனை இலவசமாகத் தந்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றி. தகவலை இலவசமாக அணுகுவது எதையும்விட முக்கியமானது" என வியந்து கூறுகிறார்.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications