ஜஸ்ட் ஒரே வாரத்தில்.. 2வது முறையாக கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்.. வெதர்மேன் சொல்வது என்ன?
சென்னைக்கு பலத்த மழை பெய்ய போகிறதாம்
சென்னை: எதிர்பார்த்தபடியே, தாழ்வு மண்டலம் தற்போது உருவாகி உள்ளது.. ஒரே வாரத்தில் 2வது முறையாக சென்னையில் கரையை கடக்கும் தாழ்வுமண்டலம் இதுவாகும் என்று வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தம் தாமதமாக தீவிரமடைந்தது.
அதன்படி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.. இது மேலும் வலுப்பெறாது என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

ரெட் அலர்ட்
இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 310 கி.மீ. தொலைவில் உள்ளது... இது தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் பரந்து விரிந்திருக்கும் என்பதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெதர்மேன்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலைதான் வெதர்மேன் பிரதீப்ஜான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்..

மாவட்டங்கள்
இன்று காலை அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், குறைந்த காற்றழுத்த தீவிரமாகிவிட்டதால் இன்றைய தினம் சென்னை உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை உள்ளது, மேற்கில் இருந்து வடமேற்கு திசைக்கு வடதமிழகத்துக்கும், தென் ஆந்திராவுக்கும் நடுவில் குறைந்த காற்றழுத்தம் நகர்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தார்.

வானிலை மையம்
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருக்குமா? இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக வானிலை மையம் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தேன்.. எதிர்பார்த்தபடியே, தாழ்வு மண்டலம் தற்போது உருவாகி உள்ளது.. ஒரே வாரத்தில் 2வது முறையாக சென்னையில் கரையை கடக்கும் தாழ்வுமண்டலம் இதுவாகும்.. நாளைய தினம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது..

மேகக்கூட்டம்
சென்னைக்கு பக்கத்தில் இவை நெருங்கி வரும்போது கனமழை பெய்யக்கூடும்.. பாண்டிச்சேரி, கரூர், திருவண்ணாமலை வரை மேகக்கூட்டங்கள் திரண்டு காணப்படுகின்றன.. அதாவது செங்கல்பட்டு ஆரம்பித்து, வேலூர் வரை விரிந்திருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.. இதையடுத்து கனமழையை எதிர்நோக்கி சென்னைவாசிகள் காத்துள்ளனர்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications