துணை முதல்வர் பதவி.. கேட்டதும் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன் இருக்கே! எப்படிங்க? யார் சொன்னா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஒரு தகவல் பரவி வரும் சூழலில் இன்று பிரஸ்மீட்டில் உதயநிதியிடமே இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த ரியாக்‌ஷன் இருக்கே..!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான ஒன்றரை வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

Deputy chief minister post? : What is the reaction of Udhayanidhi stalin

முதல் முறை அமைச்சரவைக்குள் வந்திருந்தாலும், கேபினட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரேங்க் 10 ஆக உள்ளது. பல சீனியர்களை விட கேபினட் தர வரிசையில் முதன்மை இடத்தில் இருக்கிறார் உதயநிதி. தொடர்ந்து, உதயநிதிக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்த ஒரு பேச்சு திமுக வட்டாரத்தில் மீண்டும் எழுந்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு புரோமோஷன் வழங்குவது பொருத்தமாக இருக்கும் என தலைமை நினைப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ஷாலிமர் - சென்னை கோரமண்டல் ரயில் விபத்தை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கருடன் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின். மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இன்று விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் போவதாக தகவல் பரவி வருகிறதே என்று கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்டு ஷாக்கான உதயநிதி ஸ்டாலின் பின்னர் சிரித்தபடி, "யார் சொன்னது? எங்கிருந்து இந்த தகவல் வந்தது? எனக்கு வராத தகவல் உங்களுக்கு எப்படி வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், "இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியாது. எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்பது தவறான செய்தி. நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என்றும் தெரியவில்லை" எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+