குடும்பத்தோடு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி! இன்பநிதி டி-சர்ட்டை கவனிச்சீங்களா?
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர்கள், எம்.பி.க்களும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தொண்டர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று குடும்பத்துடன் சென்று சந்தித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மனைவி கிருத்திகா, மகன் இன்பநிதி, மகள் தன்மயா ஆகியோருடன் சென்று முதல்வரும் தனது தந்தையுமான ஸ்டாலின் தாய் துர்கா ஆகியோரைச் சந்தித்து தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, இன்பநிதி, துணை முதல்வர் உதயநிதி அணிவது போன்றே திமுக இளைஞரணியின் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருந்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், "இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்ற தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம். நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், திமுக எம்பி டிஆர். பாலு, எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, ஆவடி நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் முதல்வரை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துகொண்டனர்.

இதேபோல, சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.













Click it and Unblock the Notifications