பஸ் ஸ்டிரைக் தொடங்கியது.. சென்னை பேருந்துகள் ஓடுகிறதா.. காலை வேலைக்கு செல்லும் மக்கள் நிலை என்ன
சென்னை: இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேநேரத்தில் தலைநகர் சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என ஆறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே பொங்கலுக்கு முன்னதாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
இதற்கிடையே நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தது. பேச்சுவார்த்தை தோல்வி என்பது தெரிந்தது முதலே பஸ் சேவை படிப்படியாகக் குறைந்தது.
இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. குறிப்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகரைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் வழக்கம் போலவே இயங்குகிறது. இதற்கிடையே இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து எம்டிசி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதனை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், அதிகாலையிலே அனைத்து பணிமனைகளுக்கும் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் இன்று காலை நிலவரப்படி 2,098 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள எம்.டி,சி பொது மேலாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications