நீங்களும் முகமது அலி ஆகலாம்.. தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்! பங்கேற்பது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுத் தேர்வு போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும் என்ற விபரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள் இந்த ஆண்டு நடத்த உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022 ஆம் ஆண்டிற்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நோக்கில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் கீழ்காணும் வகையில் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @mp_saminathan @SportsTN_ pic.twitter.com/hlv0uz8mWo
— TN DIPR (@TNDIPRNEWS) January 2, 2024
விதிமுறைகள்:
1. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
2. பங்கு பெறும் வீரர் / வீராங்கணைகள் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும், ஆதார் அடையாள அட்டை (அல்லது) பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி / கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது), பள்ளி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்
3. பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படாது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அண்கள், பெண்களுக்கான குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், கட்கா, மல்லர்கம்பம், தங் - டா, புனபா அமா, புனபா அனிஷுபா, ஜூடோ, யோகாசனம் ஆகிய போட்டிகள் எங்கு எப்போது நடைபெறும், எந்தெந்த எடைப்பிரிவினர் பங்கேற்கலாம் என்ற விபரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
-
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications