தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழா! நாளை 108 பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவையொட்டி 103 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் நாளை (30.10.2026) நடைபெறும் தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் 119 வது பிறந்தநாள் விழா மற்றும் 64 வது குருபூஜை விழா நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி 103 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். இந்த விழாவிற்கு வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், டூவீலர்கள், டிராக்டர், சரக்கு வாகனங்களில் வர அனுமதியில்லை. நாளை விழாவில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வாங்கிய வாகனங்களை தவிர ராமேஸ்வரம், ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பஸ்கள், கார்கள், கனகர வாகனங்கள் பட்டணம்காத்தான் இசிஆர் சாலை சந்திப்பு, பேராவூர் இசிஆர் சாலை சந்திப்பு, தேவிப்பட்டினம், ஆர்.எஸ். மங்கலம், சி.கே. மங்கலம், சருகனி, காளையார்கோயில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும்.

மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமநாதபுரம் அல்லது ராமேஸ்வரம் வரக் கூடிய பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள், மதுரை பாண்டிகோவில் சந்திப்பு, பூவந்தி வழியாக சிவகங்கை காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் வழியார ராமநாதபுரம் , ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கமுதி வரக் கூடிய வாகனங்கள் கானாவிலக்கு கிளாமரத்துப்பட்டி வழியாக கமுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர், காரைக்குடி, தேவக்கோட்டையில் இருந்து ராமநாதபும் நோக்கி வரக் கூடிய வாகனங்கள் கருமொழி, சிகே மங்கலம், ஆர் எஸ் மங்கலம் வழியாக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

அருப்புக்கோட்டை, திருச்சுழி இடங்களில் வரக் கூடிய வாகனங்கள் நரிக்குடி, பிடாரிசேரி வழியாக பார்த்திபனூர், பரமக்குடிக்கு செல்ல அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications
