கிண்டி ரயில்வே ஸ்டேஷன் எப்படி மாறுது பாருங்க! என்னென்ன வசதிகள் வரப்போகுது.. பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கிண்டி ரயில்வே நிலையம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கையாளும் இந்த ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது கிண்டி ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி குறித்த வரைபடத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கிண்டி ரயில் நிலையம்: சென்னை கோட்டத்தில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சில ரயில் நிலையங்களை அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு நிகராக மறுகட்டமைப்பு பணிகள் செய்யபட்டு வருகின்றன. அதேபோல சென்னை பூங்கா, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்தது.

இதன்படி தற்போது ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிண்டி ரயில் நிலையம் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
13.50 கோடி ஒதுக்கீடு: சென்னை புறநகரில் இருந்து சிட்டிக்குள் பல்வேறு இடங்களுக்கு செல்லவும் கிண்டி ரயில்வே நிலையம் ஒரு முனையம் போல இருக்கிறது. இதனால், பீக் நேரங்களில் சாரைசாரையாக பயணிகள் செல்வதை காண முடியும். கிண்டியை பொறுத்தவரை மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை அருகருகே உள்ளதால் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது.

ஆயிரக்கணக்கான பயணிகள் கையாளும் இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிண்டி ரயில் நிலையத்தை மேம்பாடு செய்வதற்காக, சுமார் 13.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது மறுவடிவமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளை கவரும் விதமாக கிண்டி ரயில் நிலையத்தின் நுழைவு பகுதி மாற்றியமைக்கப்பட உள்ளது.
மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம்: மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் டிக்கெட் கவுண்டரும் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளும் மறு சீரமைக்கப்பட உள்ளது. தற்போது கிண்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக தெற்கு ரயில்வே அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. பார்க்கிங் வசதிகள், டிக்கெட் புக்கிங் அலுவலக கட்டிடம், மேற்கூரைகள் மாற்றும் பணிகள், லிப்ட் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

பிரமாண்ட நுழைவு வாயில்: கிண்டி ரயில் நிலையத்தின் புதிய நுழைவு வாயில் பகுதி குறித்த வரைபடத்தையும் ரயில்வே நிர்வாகம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைம் போல பிரம்மண்டாக காட்சி தரும் நுழைவு வாயில், பணிகள் முடிந்த பிறகு பயணிகள் நெரிசல் இன்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
3 லிஃப்டுகள்: தினமும் 62 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட இருக்கிறது. ரயில் நிலையத்தில் மூன்று லிப்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட இருக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக அதேபோன்று அதிநவீன சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications